மைக்ரோசாப்ட் நிறுவனம் நடத்திய இணையவழிப்போட்டியில் முதலிடம் பிடித்த தமிழக அரசுப்பள்ளி ஆசிரியருக்கு பாராட்டு. - ThulirKalvi Blogs

Latest

Search This Site

மைக்ரோசாப்ட் நிறுவனம் நடத்திய இணையவழிப்போட்டியில் முதலிடம் பிடித்த தமிழக அரசுப்பள்ளி ஆசிரியருக்கு பாராட்டு.

உலக அளவில் மைக்ரோசாப்ட் நிறுவனம் நடத்திய இணையவழிப்போட்டியில் முதலிடம் பிடித்த தமிழக அரசுப்பள்ளி ஆசிரியருக்கு பாராட்டு.


ஆம்பூர்,ஜீன்.5:

உலக அளவில் மைக்ரோசாப்ட் நிறுவனம் நடத்திய இணையவழிப்போட்டியில் முதலிடம் பிடித்த தமிழக அரசுப்பள்ளி ஆசிரியருக்கு கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள்,பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.


சமூகத்தில் கல்வியாளர்கள் ஒவ்வொரு நாளும் செய்யும் அனைத்து அற்புதமான மற்றும் ஊக்கமளிக்கும் விஷயங்களை கொண்டாடும் வகையில் மைக்ரோ சாப்ட் நிறுவனம் வேக்லெட் சமூக வார நிகழ்வு ஜீன் 1 முதல் 5 வரை நடைபெற்றது.இதில் மைக்ரோசாப்ட் நிறுவனம் மூலம் பல அற்புதமான போட்டிகள் நடைபெற்றது.இதில் உலகம் முழுவதும் உள்ள கல்வியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஏராளமானோர் பங்கு பெற்றனர்.

இந்நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பாக தகவல்களை பரிமாறிக் கொள்ளும்  ஆசிரியர்களுக்கு ரூ .50 ஆயிரம்  மதிப்பிலான ஆப்பிள் ஐ பேடு பரிசு அறிவிக்கப்பட்டிருந்தது.   

இந்த போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த திருப்பத்தூர் மாவட்டம் ,ஆம்பூர் வட்டம் பெத்லகேம் நகராட்சி நடுநிலைப்பள்ளி ஆசிரியர் சரவணன் அவர்கள் கலந்துகொண்டு சிறப்பாக தகவல்களை பரிமாறிக் கொண்டதால் இவருக்கு அமெரிக்காவைச் சேர்ந்த மைக்ரோசாப்ட் நிறுவனம் ஆப்பிள் ஐபேடு பரிசு அறிவித்துள்ளது.

இவருடன் சேர்ந்து நைஜீரியா நாட்டைச் சேர்ந்த ஆசிரியர் மற்றும் மலேசியா நாட்டைச் சேர்ந்த ஆசிரியருக்கும் ஆப்பிள் ஐ பேடு பரிசு கிடைத்துள்ளது.

உலக அளவில் முதலிடம் பிடித்த தமிழக அரசுப்பள்ளி ஆசிரியர் சரவணன் ஏற்கனவே மைக்ரோசாப்ட் மூலம் நடைபெற்ற கல்வி மேளா நிகழ்வில் கலந்து கொண்டு டெல்லி வரை  சென்று வந்துள்ளார்.இவர் தமிழக அரசின் கனவு ஆசிரியர் விருதும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

உலக அளவில் மைக்ரோசாப்ட் நிறுவனம் மூலம் நடத்தப்பட்ட இணையவழிப் போட்டியில் முதலிடம் பிடித்த ஆசிரியர் சரவணனை தமிழகம் முழுவதும் உள்ள ஆசிரியர்கள் மற்றும் கல்வியாளர்கள்,சமூக ஆர்வலர்கள் ,பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

No comments:

Post a Comment

Please Comment