கோடைக்கு ஏற்ற குளுகுளு ஐஸ் கிரீம் செய்வது எப்படி? - ThulirKalvi Blogs

Latest

Search This Site

கோடைக்கு ஏற்ற குளுகுளு ஐஸ் கிரீம் செய்வது எப்படி?

கோடைக்கு ஏற்ற குளுகுளு ஐஸ் கிரீம் செய்வது எப்படி? 

தேவையான பொருட்கள்: 

 பால் - 1 லிட்டர் 
 முட்டை - 3 
 சர்க்கரை - 3/4 கப் 
 வெண்ணெய் - 2 மேசைக்கரண்டி 
வெண்ணிலா எசென்ஸ் - 2 மேசைக்கரண்டி 
 நெய் - சிறிதளவு 
முந்திரி - 5 
ஐஸ் 

கிரீம் செய்முறை: 

முதலில் ஒரு அகலமான பாத்திரத்தில் பாலை ஊற்றி மிதமான சூட்டில் 30 நிமிடம் கலந்து விட்டுக்கொண்டே இருக்கவும். பிறகு அதனை வேறொரு பாத்திரத்தில் மாற்றி வைத்து கொள்ளவும். 

அடுத்து 3 முட்டையின் மஞ்சள் கருவினை எடுத்து கூடவே சக்கரை கொட்டி கலந்து கொள்ள வேண்டும். பிறகு கொஞ்சம் பால் கலந்து வெண்ணெய் சேர்த்து நன்றாக கலக்கவும். பிறகு ஒரு கடாயில் பால் ஊற்றி வெண்ணெய்யை கொஞ்ச கொஞ்சமாக சேர்க்கவும். 

பிறகு 8 நிமிடம் வரை கொதிக்க விட்டு அதனுடன் வெண்ணிலா எசென்ஸ் சேர்க்கவும். பிறகு அதனை வடிகட்டி கொள்ளவும்.பிறகு முழுவதும் ஆறியவுடன் அதனை ஒரு பாத்திரத்தில் மாற்றி 3 முதல் 4 மணி நேரம் வரை பிரீசரில் வைக்கவும். 

4 மணி நேரத்திற்கு பிறகு அதனை எடுத்து மிக்சியில் போட்டு அரைக்கவும். மொத்தமாக 4 முறை இதனை தொடர்ந்து செய்ய வேண்டும். பிறகு ஒரு கடாயில் நெய் ஊற்றி உடைத்துவைத்துள்ள முந்திரியை சேர்த்து வறுக்கவும். 

பிறகு சர்க்கரை சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுத்து கொள்ளவும். பிறகு முந்திரி முழுவதுமாக ஆறியதும் அதனை நாம் ஏற்கவனவே தயார் செய்த ஐஸ் கிரீமில் கலந்து பரிமாறலாம். இப்போது சுவையான ஐஸ் கிரீம் தயார். 🔥👉இந்தச் செய்திப் பிடித்திருந்தால் தயவுசெய்து ஷேர் செய்யுங்கள்

No comments:

Post a Comment

Please Comment