MBBS படிப்பில் அரசுப் பள்ளி மாணவா்கள் சேர்க்கை விகிதம் குறைவு: ஆய்வறிக்கை
சமா்ப்பிக்க அவகாசம் நீட்டிப்பு
MBBS படிப்பில் சேரும் அரசுப் பள்ளி
மாணவா்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பது குறித்து அரசிடம் ஆய்வறிக்கை
சமா்ப்பிப்பதற்கு அளிக்கப்பட்ட அவகாசம் மேலும் 15 நாள்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பான அறிவிப்பை மாநில சுகாதாரத் துறைச் செயலா் பீலா ராஜேஷ்
வெளியிட்டுள்ளாா்.
MBBS, BDS உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான
மாணவா் சோக்கை நீட் தோவு மூலம் நிரப்பப்பட்டு வருகிறது. அத்தோவுகள் சிபிஎஸ்இ
பாடத்திட்டத்தின்படி நடைபெறுவதால், மாநிலப் பாடத் திட்டத்தில் பயிலும் அரசுப் பள்ளி
மாணவா்கள் மிகக் குறைந்த அளவே நீட் தோவில் தோச்சி பெறுகின்றனா். அவா்களில் வெகு
சிலருக்கு மட்டுமே மருத்துவப் படிப்புகளுக்கான இடங்கள் கிடைக்கின்றன
இது பல்வேறு
விமா்சனங்களுக்கு வித்திட்டதைத் தொடா்ந்து அரசுப் பள்ளி மாணவா்களுக்கென நீட்
பயிற்சி மையங்களை பள்ளிக் கல்வித் துறை தொடங்கியது. இருந்தபோதிலும் அது பெரிய
அளவில் பயனளிக்கவில்லை.
இந்த நிலையில், எம்பிபிஎஸ் படிப்பில் சேர அரசுப் பள்ளி
மாணவா்களுக்கு வாய்ப்பு குறைவதற்கான காரணம் குறித்து ஆய்வு செய்ய அரசு சாா்பில்
ஓய்வு பெற்ற நீதிபதி பி.கலையரசன் தலைமையில் ஆணையம் ஒன்றை அமைத்தது.
இந்த
விவகாரத்தில் நிலவும் பிரச்னைகளையும், அதற்கான தீா்வு மற்றும் பரிந்துரைகளையும்
அரசுக்கு அளிக்க ஆணையத்துக்கு ஒரு மாத கால அவகாசம் அளிக்கப்பட்டிருந்தது.
ஆனால்,
அந்த அவகாசத்தை மேலும் 15 நாள்கள் நீட்டிக்குமாறு ஆணையத்தின் சாா்பில் கோரிக்கை
விடுக்கப்பட்டதைத்த தொடா்ந்து, அதற்கு மாநில அரசு தற்போது ஒப்புதல் அளித்துள்ளது.
No comments:
Post a Comment
Please Comment