NEET தேர்வு விவகாரத்தில் மத்திய அரசு முடிவெடுக்கும் சுகாதாரத்துறை செயலர்
நேற்று வரை ஒத்திவைப்பதாக அல்லது ரத்து செய்வதா என்பது குறித்து மத்திய அரசுதான் முடிவெடுக்கும் என்று சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். அதில் தமிழகத்தின் பங்கு எதுவும் இல்லை என்றும் அவர் கூறினார்.
அரசு தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள எம்பிபிஎஸ் பிடிஎஸ் சித்தா ஆயுர்வேதம் யுனானி ஹோமியோபதி உள்ளிட்ட இடங்களை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு கடந்த மே மாதம் மூன்றாம் தேதி நடைபெறுவதாக இருந்தது.
இதனிடையே CORONA பாதிப்பு காரணமாக NEET தேர்வு ஜூலை 26ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இதுதொடர்பாக தமிழக அரசு சார்பில் மத்திய அரசுக்கு ஏதேனும் கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டனவா? என கேட்டதற்கு சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது: நீட் தேர்வு குறித்து தன்னிச்சையாகவும் தனிப்பட்ட முறையில் கருத்து தெரிவிக்க இயலாது. இந்த விவகாரம் தொடர்பாக மத்திய மாநில அரசுகள் உரிய முடிவெடுக்க வேண்டும். தமிழகத்தை போன்ற மகாராஷ்டிரத்திலும், டில்லியுலும் CORONA பாதிப்பு தீவிரமாக உள்ளது, எனவே அதை கருத்தில் கொண்டு மத்திய அரசு முக்கிய முடிவுகள் எடுக்கக்கூடும் என்றார். 🔥👉இந்தச் செய்திப் பிடித்திருந்தால் தயவுசெய்து ஷேர் செய்யுங்கள்
No comments:
Post a Comment
Please Comment