PDF ஃபைலில் உள்ளதை எழுத்தாக மாற்ற ஒரு எளிய வழி
PDF ஃபைலில் உள்ளதை எழுத்தாக மாற்ற
வேண்டும் என்றால் வேலை மெனக்கெட்டு தட்டச்சு செய்ய வேண்டாம். அதற்கு ஒரு எளிய வழி
உள்ளது.
கம்ப்யூட்டரில் PDFஐ கூகுள் டிரைவ்வில் முதலில் ஏற்ற வேண்டும். அதன் பின்
ரைட் கிளிக் செய்து 'ஓப்பன் வித் கூகுள் டாக்குமெண்ட்' என்று கொடுக்க வேண்டும்.
அதேபோல் மொபைலில் கூகுள் டாக்குமெண்ட் செயலியை இன்ஸ்டால் செய்துவிட்டு ஃபைல்
மேனேஜருக்கு சென்று PDF ஃபைல்களை கூகுள் டாக்குமெண்ட்ஸ் மூலம் திறந்தால் கூகுளே
எழுத்தாக மாற்றிக் கொடுத்து விடும்.
நாம் தனியாக உட்கார்ந்து டைப் செய்ய வேண்டிய
அவசியம் இல்லை. இவற்றில் முக்கியமாக கவனிக்க வேண்டியது PDF ஃபைல் 50 பக்கங்களுக்கு
குறைவாக இருக்க வேண்டும்.
ஒருவேளை அதிகமாக இருந்தால் ஸ்பிலிட் PDF என்று தேடினால்
கூகுளே பிரித்து நமக்கு எழுத்தாக மாற்றி கொடுக்கும் PDF ஃபைல் ஆங்கில மொழியில்
இருந்தால் 100% சரியாக இருந்தால்.
தமிழ் உள்பட மற்ற மொழிகளாக இருந்தால் 95% சரியாக
இருக்கும். ஒருசில திருத்தங்களை மட்டும் நாம் செய்து கொண்டால் போதும்.
No comments:
Post a Comment
Please Comment