உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட
கரோனா தடுப்பு மருந்து
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் திட்டம்
கரோனா வைரஸ் தொற்று நோயைத் தடுக்க உள்நாட்டிலேயே தயாரிக் கப்பட்ட தடுப்பு மருந்தை ஆகஸ்ட் 15-ம் தேதி அறிமுகம் செய்ய இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) திட்டமிட்டுள்ளது.
சீனாவில் உருவான கரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி லட்சக்கணக்கான மக்களின் உயிர் களைப் பறித்துள்ளது.
இந்த வைர ஸைக் கட்டுப்படுத்தும் நோக்கில் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் உலகின் பல்வேறு நாடுகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. இந்தியாவும் கரோனா வைரஸுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.
இந்த ஆராய்ச்சியில் ஐசிஎம்ஆர்-ருடன் இணைந்து ஹைதராபாத்தில் உள்ள பாரத் பயோடெக் நிறுவனம் (பிபிஐஎல்) ஈடுபட்டது. இந்த ஆய்வின் முடிவில் புதிய தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக விலங்குகளிடம் இதை சோதனை செய்ததில் நல்ல பலன் கிடைத்துள்ளது. ஜூலை மாதத்தில் இருந்து மனிதர்களிடம் செலுத்தி சோதனை மேற்கொள்ள இந்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு அமைப்பு ஒப்புதல் வழங்கியது.
நாடு முழுவதும் 12 மையங்களில் இந்த பரிசோதனை விரைவில் மேற்கொள்ளப்பட உள்ளது.
புனேவில் உள்ள ஐசிஎம்ஆர் நடத்தும் தேசிய வைராலஜி இன்ஸ்டி டியூட்டில் இந்த தடுப்பு மருந்தை பாரத் பயோடெக் நிறுவனம் (பிபிஐஎல்) உருவாக்கி உள்ளது.
இந்நிலையில், கரோனா தடுப்பு மருந்து பரிசோதனையை விரைவுபடுத்துமாறு பாரத் பயோடெக் நிறுவனத்துக்கு ஐசிஎம்ஆர் கடிதம் எழுதியுள்ளது.
அதில் ஜூலை 7-ம் தேதிக்குள் பரிசோதனை உள்ளிட்ட பணிகளை விரைவுபடுத்துமாறு அறிவுறுத்தி உள்ளது. சோதனை வெற்றிபெறும் பட்சத்தில், ஆகஸ்ட் 15-ம் தேதி இந்த தடுப்பு மருந்து குறித்த விவரங்களை வெளியிட ஐசிஎம்ஆர் முடிவு செய்துள்ளது.
உள்நாட்டிலேயே உருவாக்கப் பட்டுள்ள முதல் கரோனா தடுப்பு மருந்து இது என்பதால் ஆராய்ச் சிக்கு முன்னுரிமை அளிக்குமாறு ஐசிஎம்ஆர் தலைமை இயக்குநர் பல்ராம் பார்கவா தெரிவித்துள்ளார். கரோனா வைரஸ் பரவலின் தீவி ரத்தை உணர்ந்து மனித சோதனைக் கான பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என அவர் வலியுறுத்தி யுள்ளார்.
மேலும் 12 மையங்களில் மருந்தை செலுத்தி நடத்தப்படும் சோதனையில் கேடிலா ஹெல்த் கேர் நிறுவனத்தின் துணை நிறு வனமான ஜைடுஸும் இணைந் துள்ளது. - பிடிஐ
🔥👉இந்தச் செய்திப் பிடித்திருந்தால் தயவுசெய்து ஷேர் செய்யுங்கள்
No comments:
Post a Comment
Please Comment