ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்கும்படி மாணவர்களை கட்டாயப்படுத்தக் கூடாது: தனியார் பள்ளிகளுக்கு கல்வித் துறை அறிவுறுத்தல் - ThulirKalvi Blogs

Latest

Search This Site

ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்கும்படி மாணவர்களை கட்டாயப்படுத்தக் கூடாது: தனியார் பள்ளிகளுக்கு கல்வித் துறை அறிவுறுத்தல்

ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்கும்படி மாணவர்களை கட்டாயப்படுத்தக் கூடாது: தனியார் பள்ளிகளுக்கு கல்வித் துறை அறிவுறுத்தல் தொடர் கனமழையால் சென்னை,காஞ்சிபுரம் உள்ளிட்ட கடலோரமாவட்டங்களில் மின்தடை, வீடுகளில் வெள்ளநீர் புகுதல் போன்றசிக்கல்களை மக்கள் சந்தித்து வருகின்றனர். இந்த சூழலில் ஆன்லைன்வகுப்புகளில் பங்கேற்க சில தனியார் பள்ளிகள், மாணவர்களை நிர்பந்திப்பதாக கல்வித்துறைக்கு புகார்கள் வந்துள்ளன. 
 
இதையடுத்து மழைக்காலங்களின்போது ஆன்லைன் வகுப்பில் பங்கேற்க மாணவர்களை, பள்ளிகள் கட்டாயப்படுத்தக் கூடாது என்று பள்ளிக்கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் கூறியதாவது: பருவமழை தீவிரத்தால் கடலோர மாவட்டங்களில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. 
 
எனவே, நடைமுறைசிக்கல்களைக் கருத்தில் கொண்டு மழை பாதிப்புள்ள பகுதிகளில் இயங்கும் பள்ளி மாணவர்களுக்கு முழுமையாக விடுமுறை வழங்க வேண்டும். ஆன்லைனில் பாடம்,தேர்வுகள் நடத்தினாலும் மாணவர்கள் பங்கேற்க நிர்பந்திக்க கூடாது. வீட்டுப்பாடம் உட்பட இதர கற்றல் பணிகளையும் வழங்கக்கூடாது. 
 
இதுதொடர்பாக மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரிகள் வாயிலாகதனியார் பள்ளிகளுக்கு உரிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர்கள் கூறினர். 🔥👉இந்தச் செய்திப் பிடித்திருந்தால் தயவுசெய்து ஷேர் செய்யுங்கள்

No comments:

Post a Comment

Please Comment