எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பம் தொடக்கம்: நீட் தேர்வில் தகுதி பெற்ற மாணவ, மாணவிகள் ஆர்வம் - ThulirKalvi Blogs

Latest

Search This Site

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பம் தொடக்கம்: நீட் தேர்வில் தகுதி பெற்ற மாணவ, மாணவிகள் ஆர்வம்

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பது தொடங்கியது. நீட் தேர்வில் தகுதி பெற்றவர்கள் ஆர்வமாக விண்ணப்பித்து வருகின்றனர். தமிழகத்தில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள 11 அரசு மருத்துவக் கல்லூரிகள் உட்பட மொத்தம் 37 அரசுமருத்துவக் கல்லூரிகள் மற்றும் 2 அரசு பல் மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. தேசிய ஒதுக்கீட்டுக்கு 15 சதவீதம் இடங்கள் போக 4,277எம்பிபிஎஸ், 175 பிடிஎஸ் இடங்கள்உள்ளன. இதுதவிர, தனியார் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீடு, அரசு ஒதுக்கீடு இடங்களும் உள்ளன. அரசு, தனியார் கல்லூரிகளின் அரசு ஒதுக்கீட்டு இடங்கள், தனியார்கல்லூரிகளின் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வை, மருத்துவக் கல்வி இயக்குநரகம் நடத்துகிறது.இந்நிலையில், எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு 2021-22 கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கை கலந்தாய்வுக்கு விண்ணப்பிப்பதுhttps://www.tnhealth.tn.gov.in மற்றும் https://tnmedicalselection.netஆகிய இணையதளங்களில் நேற்று தொடங்கியது. நீட் தேர்வில் தகுதி பெற்றவர்கள் ஆர்வமாக விண்ணப்பித்து வருகின்றனர். வரும் ஜன.7-ம் தேதி மாலை 5 மணிவரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். அரசு ஒதுக்கீடு, நிர்வாக ஒதுக்கீடு இடங்களுக்கு தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டும். அரசு ஒதுக்கீட்டு இடத்துக்கு ரூ.500, நிர்வாக ஒதுக்கீட்டு இடத்துக்கு ரூ.1,000 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கல்லூரிகள், கட்டணம், ஆன்லைனில் விண்ணப்பிப்பது உள்ளிட்ட விவரங்களை, இணையதளங்களில் வெளியிடப்பட்டுள்ள தகவல் தொகுப்பேடுகள் மூலம் தெரிந்துகொள்ளலாம். கூடுதல் தகவல்களுக்கு 044-28364822, 9884224648, 9884224649, 9884224745, 9884224746 ஆகிய உதவி எண்களை தொடர்பு கொள்ளலாம். ஆன்லைனில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, தகுந்த ஆவணங்களுடன் நேரிலோ, தபால் மூலமாகவோ `செயலாளர், தேர்வுக் குழு, மருத்துவக் கல்விஇயக்ககம், 162, ஈவெரா நெடுஞ்சாலை, கீழ்ப்பாக்கம், சென்னை-600010’ என்ற முகவரியில் வரும் ஜனவரி 10-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். 🔥👉இந்தச் செய்திப் பிடித்திருந்தால் தயவுசெய்து ஷேர் செய்யுங்கள்

No comments:

Post a Comment

Please Comment