கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- அரசு, அரசு உதவி பெறும் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிறுவனங்களில் பிளஸ்-1 முதல் பி.எச்.டி. வரை (தொழிற் கல்வி, தொழில்நுட்ப கல்வி, மருத்துவம் உள்பட) படிக்கும் இஸ்லாமிய, கிறிஸ்துவ, சீக்கிய, புத்த மற்றும் பார்சி, ஜெயின் மதங்களை சேர்ந்த சிறுபான்மையின மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. 2021-2022-ம் கல்வி ஆண்டுக்கான உதவித்தொகை பெற வருகிற 15-ந் தேதி வரை காலநீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. www.scholarships.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும். தகுதியுள்ள சிறுபான்மையின மாணவ, மாணவியரின் விண்ணப்பத்தினை சரிபார்ப்பதில் சுணக்கம் காட்டும் அல்லது தவறும் கல்வி நிலையங்கள் மீது அரசால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.
Search This Site
New
சிறுபான்மையின மாணவ, மாணவிகள் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Please Comment