நெல்லை, தூத்துக்குடியில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
நெல்லை,
வங்கக்கடலில் உருவான வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் கடந்த 17, 18 ஆகிய தேதிகளில் அதி கனமழை பெய்தது.
தொடர்ந்து பல மணிநேரமாக இடைவிடாது பெய்த மழையின் காரணமாக இந்த 4 மாவட்டங்களும் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன.அதிலும் குறிப்பாக நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் வரலாறு காணாத அளவுக்கு மழை பதிவாகி இருப்பதால் இரு மாவட்டங்களும் மழை வெள்ளத்தால் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளன. வெள்ளத்தில் சிக்கிய மக்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
மீட்கப்பட்ட மக்கள் பள்ளி கட்டிடங்களில் அமைக்கப்பட்டுள்ள முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு தேவையான நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட நிர்வாகங்கள் உத்தரவிட்டுள்ளன
Today is a holiday for schools and colleges in Nellai and Tuticorin
Paddy,
Due to the atmospheric circulation over the Bay of Bengal, Nellai, Thoothukudi, Kanyakumari and Tenkasi districts received heavy rains on the 17th and 18th.
These 4 districts are reeling under floods due to the incessant rain for several hours. Especially in Nellai and Tuticorin districts, both the districts have been heavily affected by the rains as they have recorded unprecedented rainfall. The rescue operations of the flood-affected people are going on.
The rescued people have been accommodated in camps set up in school buildings. There they are being provided with the necessary relief.
In this situation, the district administrations have declared a holiday for schools and colleges in Nellai and Tuticorin districts today
No comments:
Post a Comment
Please Comment