Transaction through WhatsApp - ThulirKalvi Blogs

Latest

Search This Site

Transaction through WhatsApp

வாட்ஸ் அப்பிலே பணப்பரிவர்த்தனை! இந்த நாட்டுக்குத்தான் சலுகை

ஃபேஸ்புக்குடன் இணைந்து செயல்பட்டு வரும் வாட்ஸ் அப் இந்தியாவின் 200 மில்லியன் பயனாளர்களுக்கென புதிய அப்டேட் ஒன்றினை இன்னும் ஆறுமாத காலத்தில் தரவிருக்கிறது.

பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் ஏற்பட்ட மாற்றங்களுக்கு ஈடுகொடுக்கும் வகையில் வாட்ஸ் அப்பில் இந்தப் புதிய அப்டேட் விரைவில் கொண்டுவரப்படும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்குப் பின்னர் பணப் பரிவர்த்தனைகளில் சிக்கல்களையும், பல்வேறு இன்னல்களையும் மக்கள் தொடர்ந்து சந்தித்துவருகின்றனர். உலக நடப்புக்கு ஏற்ப தன்னை எப்போதும் புதுப்பித்துக்கொள்ளும் வாட்ஸ் அப் தற்போது இப்பிரச்னைக்குத் தீர்வளிக்கும் வகையில் புதிய அப்டேட்டினைத் தருவதற்குத் தயாராகி வருகின்றது.
இந்தப் புதிய அப்டேட் வாட்ஸ் அப்பில் ரொக்கமில்லாப் பணப்பரிவர்த்தனைக்கான புதிய வசதியை ஏற்படுத்தி இணைக்கவுள்ளது. யு.பி.ஐ. தொழில்நுட்பத்தின் மூலம் இந்திய வாட்ஸ் அப் பயனாளர்களுக்கு மட்டுமே இந்த அப்டேட். இதன்மூலம் எந்த வங்கிக் கணக்கிலிருந்தும் பயனாளர்கள் யாருக்கு வேண்டுமானாலும் பணப்பரிவர்த்தனைகள் மேற்கொள்ளலாம்.

No comments:

Post a Comment

Please Comment