இவற்றைப் பின்பற்ற அவசியம் முயற்சியுங்கள்
சி ல நேரங்களில் WhatsApp ல் பல நல்ல
தகவல்களும் வரும், அது போல வந்தது தான் இது. இதை எழுதியவர் யார் என்று
தெரியவில்லை ( வழக்கம் போல பெயரில்லாமல் தான் வந்தது 🙂 ) . எழுதியவருக்கு
வாழ்த்துகள்.
அனைவரும் பின்பற்ற வேண்டிய நாகரிகங்கள் இவை
> ஒருவரோ , பலரோ உறங்கிக் கொண்டிருக்கும் அறையில் நுழையும் போது டமால் டுமீல் தட் புட் தடால் பணால் என்று சத்தம் போடாதீர்கள். வியாக்ர பாதர், தேனீ உட்காராத பூக்களைக் கண்டுபிடிக்கப் புலிப்பாதம் வேண்டிக் கொண்டாராம். அப்படி நீங்களும் புலி / பூனைப் பாதத்துடன் நடந்து சென்று காரியத்தை முடித்துக் கொள்ளுங்கள்.
> பொது இடங்களில் நிற்கும் போது யாருடைய வழியையேனும் அடைத்துக் கொண்டு நிற்கிறீர்களா?! என்று உறுதி செய்து கொள்ளுங்கள். ரயிலில் பேருந்தில் தேவை இல்லாமல் எழுந்து நிற்காதீர்கள்.
மூவர் அமரும் இருக்கைகளில் உங்கள் இடத்தை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள். பைகளை இருக்கையில் வைக்காதீர்கள். ரயிலில் இரவு பயணத்தில் ஏதேனும் காரணத்துக்காக விளக்கைப் போட்டால் மீண்டும் அணைக்க மறக்காதீர்கள்.
> நண்பர்கள் / உறவினர்கள் வீடுகளுக்குச் செல்லும்போது அவற்றின் அமைப்பைக் குறை சொல்லாதீர்கள் (குளியலறை இங்கே இருந்திருக்கலாம்!), அமைப்பை மாற்ற யோசனை சொல்லாதீர்கள்.
(இந்தப் பிரிட்ஜை இங்கே வெச்சுக்கலாமே! - None of your business!). அவர்கள் படுக்கையறைக்குச் செல்லாதீர்கள். போனைக் கேட்காதீர்கள், வைஃபை பாஸ்வேர்ட் கேட்காதீர்கள்.
> கடனைத் திருப்பிக் கேட்கும் முன்னர் அதற்கு குறிப்பிட்ட குறைந்தபட்ச நாட்கள் காத்திருங்கள்.
> ஒருவர் கைபேசி அழைப்பை எடுக்கவில்லை என்றால் தொடர்ந்து விடாமல் மீண்டும் மீண்டும் அழைப்பது வேண்டாம். அது கொஞ்சம் சைக்கோ தனம். அவர்களையும் தேவையில்லாமல் பயமுறுத்தும்.
> ஒருவரிடம் பேசிக் கொண்டிருக்கிறீர்கள். அவரை விட வயதிலோ, அந்தஸ்திலோ, பதவியிலோ , முக்கியத்துவத்திலோ உயர்ந்த ஒருவர் உங்களை அழைக்கிறார்.
பலர் அந்த முதல் நபரை அப்படியே அம்போ என்று விட்டுவிட்டு பரபரப்புடன் இரண்டாம் நபரிடம் ஓடி விடுவார்கள். அவரிடம் குறைந்தபட்சம் 'ஒரு நிமிடம், போய் வந்துவிடுகிறேன்' என்று சொல்லிச் செல்லவும்.
> பரபரப்பான சாலைகளில் குழந்தைகளை / குடும்பத்தை நிழற்படம் எடுக்காதீர்கள். கேமெராவுக்கும் நிழற்படம் எடுக்கப்படுபவருக்கும் இடையே நடக்க நிறையப் பேர் தயங்கித் தயங்கி நின்றிருப்பார்கள்.
> பொதுக் கழிப்பிடங்களை உபயோகித்தபின் நிறையத் தண்ணீர் ஊற்றிவிட்டு வாருங்கள்.
> பேருந்திலும், ரயிலிலும், லிப்டிலும் முதலில் உள்ளே இருப்பவர்கள் இறங்கிய பின் தான் நீங்கள் ஏற வேண்டும்.
> பொது இடங்களில் பேசும்போது கத்திப் பேசாதீர்கள். மொபைல் அழைப்பு வந்தால் தனியாகப் போய் ஓரிடத்தில் பேசி விட்டு வாருங்கள்.
டாக்சிதான் ஏறிவிட்டோமே என்று டாக்சியில் கத்திப் பேசாதீர்கள். அது ஓட்டுநரை தொந்தரவு செய்யும். ஹெட்செட்டில் பாட்டுக் கேட்டுக்கொண்டே சத்தமாகப் பேசவோ , பாடவோ, டான்ஸ் ஆடவோ வேண்டாம்.
> நீங்கள் ஓட்டுனராகவோ அல்லது சேவை வழங்குநராகவோ (எலக்ட்ரீசியன், பிளம்பர் , பெயிண்டர் etc ) இருந்தால் வாடிக்கையாளரின் தனிப்பட்ட விஷயங்களை / தகவல்களைக் கேட்காதீர்கள், உங்கள் வேலையை மட்டும் பாருங்கள்.
> சூப்பர் மார்க்கெட்டில் உங்களுக்குப் பின்னே வரிசை நிற்கிறது. அப்போது பில் போடுபவரிடம் தேவையில்லாத தகவல்களைக் கேட்டுக்கொண்டு இருக்காதீர்கள். (இந்த ஸ்கீம் பற்றி டீட்டெயில்ட்டா சொல்றீங்களா?).
அதே போல.. "இருங்க , ப்ரெஷ் வாங்க மறந்துட்டேன்!" என்று ஓடாதீர்கள். consider others !
> ஒருவர் உங்களுக்கு treat தரும் போது இதுதான் சாக்கு என்று விலையுயர்ந்த அயிட்டங்களை ஆர்டர் செய்யாதீர்கள்.
> ஒருவர் வீட்டுக்குப் போகும் முன்னர் பல மணிநேரங்களுக்கு முன்னரே தகவல் சொல்லுங்கள். No surprises! நீங்கள் சர்ப்ரைஸ் விசிட் என்று நினைத்துக் கொண்டு போவது அவர்களை எரிச்சல் படுத்தும்.
> நீங்கள் விருந்தினராக உறவினர் வீட்டுக்குச் சென்றால் உங்களுக்குத் தேவையான மாத்திரை மருந்துகளைக் கொண்டு செல்லுங்கள். அங்கே போய் ராத்திரி 9 மணிக்கு 'ரகு ,எனக்கு இந்த மாத்திரை வாங்கி வந்திடறியா ' என்று கடுப்பேற்றாதீர்கள்.
> முதல் சந்திப்பிலேயே ஒருவரைப் பற்றிய opinion களைத் தவிருங்கள். "நீங்க ரொம்ப shy டைப்பா?' வந்ததில் இருந்து பத்து வார்த்தை கூடப் பேசி இருக்க மாட்டீங்க".
> நீங்கள் சந்திக்கும் நபரைப்பற்றி அதிகம் கேளுங்கள் / பேசுங்கள். உங்களைப் பற்றி அல்ல. (நான் எப்படின்னா, நான் இப்படித்தான், எனக்கு இது பிடிக்காது, ஒருநாள் நான்.etc )
> யாராக இருந்தாலும் ஒருவர் வாசலை விட்டு நகர்ந்த அடுத்த மைக்ரோ வினாடி கதவை அடைக்காதீர்கள் . அவர்கள் கொஞ்ச தூரம் போகும்வரை காத்திருங்கள்.
> வயது, சம்பளம், விவாகரத்துக் காரணம், இவைகளைக் கேட்காதீர்கள். தம்பதிகளிடம் "எப்போது குழந்தை?" என்று கேட்காதீர்கள்.
> உங்களை விட வயதில் சிறியவர்களிடம் உரையாடும்போது அறிவுரை கூறாதீர்கள். No one likes advices.
> வீட்டில் உறவினர்கள் வருகிறார்கள் என்றால் அவர்களுக்கு அன்றாடம் தேவையானவற்றை வாங்கி வையுங்கள். அவர்களைப் குளியலறை சென்று என்றோ தீர்ந்து போன பேஸ்டை பிதுக்க வைக்காதீர்கள்.
> புதுமனைப் புகுவிழாவின் போது வீடு வாங்கியவரை முந்திரிக் கொட்டை போல 'ஸ்கொயர் பீட் எத்தனை?' என்று கேட்காதீர்கள். 'எங்க ஏரியாவில் கம்மி ரேட்' என்றெல்லாம் சொல்லாதீர்கள். 'வீடு நல்லா இருக்கு , கங்கிராட்ஸ்' என்று முதலில் சொல்லுங்கள்.
> உங்கள் பிள்ளைகளின் நண்பர்கள் வீட்டுக்கு வந்தால் அவர்களைப் பேச விடுங்கள். நடுநாயகமாக உட்கார்ந்து கொண்டிருக்காதீர்கள்.
அதே போல இளைஞர்களின் விஷயத்தில் தலையிடாமல் ஒதுங்குங்கள். 70 வயதானாலும் ஜோவியலாகப் பேசுகிறேன் பேர்வழி என்று 'என்னடா அஷோக் ,நேத்து ராத்திரி அஜால்ஸ் குஜால்ஸ் தானா?' என்றெல்லாம் கேட்காதீர்கள்.
> ஒருவர் உங்களிடம் அன்பளிப்பை கிஃப்ட் ரேப் செய்து கொடுத்தால் 'பிரிக்கலாமா?' என்று கேட்டுவிட்டுப் பிரியுங்கள் . 'ஓ! சாண்டிவிட்ச் மேக்கரா, ஏற்கனவே என் கிட்ட இருக்கே' என்றெல்லாம் சொல்லாதீர்கள். Accept it .
> பழைய நண்பர்கள் சந்திப்பில் உங்களைப் பற்றி / உங்கள் குழந்தைகள் பற்றி உயர்வாகவோ தாழ்வாகவோ பேசிக் கொள்ளாதீர்கள். உங்கள் Designation யை கேட்டால் மட்டும் குறிப்பிடுங்கள்.
> ஒருவருடைய மதம் / இனம் / ஜாதி பற்றிக் கேட்கவோ பேசவோ செய்யாதீர்கள்.
> உறவினர்களுக்குச் சமைக்கும்முன் இந்த அய்ட்டம் உங்களுக்குப் பிடிக்குமா என்று கேட்டுவிட்டுச் சமையுங்கள்.
> ராத்திரி 8 மணிக்கு மேல் ஒருவருடைய வீட்டுக்கு செல்ல வேண்டாம். 9 மணிக்கு மேல் போன் செய்ய வேண்டாம். (unless they are your spouse / lovers )
நீங்கள் விருந்தினராகச் சென்றிருந்தால் காலை சீக்கிரம் எழுந்து கொள்ளுங்கள். 10 மணிவரை குறட்டை விட்டுத் தூங்க வேண்டாம்.
> வெளியில் போகையில் சில்லறை கொண்டு செல்லுங்கள். 100 ரூபாய் பில்லுக்கு 2000 ரூபாய் நீட்டி சர்ப்ரைஸ் தராதீர்கள். அதே போல முதலிலேயே ரூபாயை எடுத்துப் பாக்கெட்டில் போட்டுக் கொள்ளுங்கள்.
சிலர் அவர்கள் முறை வந்த பின்பு தான் நிதானமாக ஹேண்ட் பேக்கை அகழ்வாராய்ச்சி செய்வார்கள்.
> ஒருவரை 3 வினாடிகளுக்கு மேல் தொடர்ந்து பார்த்துக் கொண்டிருப்பது offensive. (அந்த ஒருவர் உங்கள் காதலியாகவோ காதலனாகவோ இல்லாத பட்சத்தில்!).
அதேபோல் ஒருவர் சமையல் செய்யும்போதோ, கோலம் போடும்போதோ , வரையும்போதோ பின்னால் நின்று கொண்டு உற்றுப் பார்த்துக்கொண்டே இருக்காதீர்கள்.
> கைக்குழந்தைகளைத் திரையரங்குக்கு அழைத்துச் செல்லாதீர்கள்.
> பாடல்களை எப்போதும் இயர் போனிலேயே கேளுங்கள். சைனா செட்டை இயக்கி மற்றவர்களைக் கதிகலங்க வைக்காதீர்கள்.
> ஒருவரின் உடல் அமைப்பைப் பற்றி கருத்து கூறாதீர்கள். என்ன சார்? தொப்பை பெருசாயிருச்சு போல!
> டாய்லெட் யூரினலில் ஏற்கனவே ஒருவர் இருந்தால் அவர் பக்கத்தில் இருக்கும் யூரினலைத் தவிருங்கள்.
> Service industry யில் இருப்பவர்கள் எல்லாரிடமும் அப்படித்தான் பேசுவார்கள். அதைச் சிக்னல் என்று எடுத்துக்கொண்டு வழியாதீர்கள்.
> மற்றவரின் taste / preference களைக் குறை சொல்லாதீர்கள். "இந்தப் புக்கெல்லாம் எப்படித்தான் படிக்கிறீர்களோ / இந்தப் பாட்டெல்லாம் எப்படிக் கேட்கறீங்களோ!"
> ஒருவர் நிழற்படம் பார்க்க போனை உங்களிடம் நீட்டினால் அந்த நிழற்படத்தை மட்டும் பாருங்கள்.
> அளவுக்கதிகமான பெர்ஃப்யூம் போட்டுகொண்டு போய் எல்லாருக்கும் தலைவலி வரவழைக்காதீர்கள்.
> முகநூலில் நட்பு கிடைத்தவுடன் அவர் அனுமதி கேட்காமல் video Chat அழைப்பு விடுக்காதீர்கள்
> குழந்தை இன்னும் இல்லை என்றால் அத்துடன் விட்டு விடுங்கள். ஏன் என்று கேட்டுக் குடையாதீர்கள்.
கொசுறு
இதில் நான் கிட்டத்தட்ட 95% பின்பற்றுகிறேன், மகிழ்ச்சி 🙂 . நீங்கள் எப்படி?

No comments:
Post a Comment
Please Comment