அரசுப்பள்ளி கழிவறையை நவீனப்படுத்திய ஆசிரியர் : குவியும் பாராட்டுக்கள் - ThulirKalvi Blogs

Latest

Search This Site

அரசுப்பள்ளி கழிவறையை நவீனப்படுத்திய ஆசிரியர் : குவியும் பாராட்டுக்கள்

அரசுப்பள்ளி கழிவறையை நவீனப்படுத்திய ஆசிரியர் : 

குவியும் பாராட்டுக்கள் 

விழுப்புரத்தில் குறைந்த செலவில் அரசுப்பள்ளி கழிவறையை நவீனப்படுத்திய பள்ளி ஆசிரியர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.





விழுப்புரம் மாவட்டம், சேரானூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 1 முதல் 8ம் வகுப்பு வரை 114 மாணவர்கள் படிக்கின்றனர். அதில் பெரும்பாலானோர் ஏழை, விவசாய குடும்பங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் தான். இந்தப் பள்ளியில் உள்ள கழிவறை சுகாதாரமற்ற முறையில் இருந்துவந்தது. இதனால், மாணவர்கள் திறந்த வெளியில் இயற்கை உபாதைகளை கழித்தனர். மாணவர்களுக்கு சுகாதார சூழலை உருவாக்குவதற்காக பள்ளியின் தலைமையாசிரியரும், ஆசிரியர்களும் இணைந்து ஆலோசித்தனர்.








இதற்காக, 20 லிட்டர் கொள்ளளவு கொண்ட தண்ணீர் கேன்களை வாங்கி அவற்றை நவீன கழிவறைகளைப்போன்று வடிவமைத்து மாணவர்களுக்கான நவீன கழிவறையை ஆசிரியர்களே உருவாக்கினர். இயற்கை உபாதையை கழித்தபின்னர், கைகால்களை கழுவதற்கு தனியாக தண்ணீர் குழாயும் அமைக்கப்பட்டுள்ளது. 






இதன் மூலம் மாணவர்களிடையே கழிவறை சுகாதாரப் பழக்கத்தை ஆசிரியர்கள் பழக்கியுள்ளனர். இதற்கான செலவை தலைமையாசிரியரும், பிற ஆசிரியர்களும் இணைந்து பகிர்ந்து கொண்டுள்ளனர். இந்த நவீன கழிவறையை பள்ளி மேலாண்மைக் குழுவைச் சேர்ந்த கிராம மக்களே திறந்து வைத்தனர். பள்ளி ஆசிரியர்களின் இந்த அர்ப்பணிப்பும், அக்கறையும் மக்களிடையே பாராட்டை பெற்றுள்ளது.

No comments:

Post a Comment

Please Comment