Teacher training institution... - ThulirKalvi Blogs

Latest

Search This Site

Teacher training institution...

ஆசிரியர் பள்ளிகள் மூடப்படாது: அமைச்சர் விளக்கம்
சென்னை: திமுக கொண்டு வந்த கவன ஈர்ப்பு தீர்மானம் மீது அமைச்சர் செங்கோட்டையன் அளித்த பதில்: தமிழகத்தில் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் ஆசிரியர் பயிற்சி பள்ளிகள், சுயநிதி ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகள் என மொத்தம் 366 பள்ளிகள் இயங்கி வருகின்றன. ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் பணி முன் பயிற்சிகளை (டிடிஎட்) தற்காலிகமாக நிறுத்தி வைக்கவும், அவற்றில் பணியாற்றும் விரிவுரையாளர்களை பணியிடைப் பயிற்சிக்கு பயன்படுத்திக் கொள்ளவும் மத்திய அரசு அறிவுரை வழங்கியுள்ளது.
அதன் அடிப்படையில் தமிழகத்தில் 20 மாவட்டங்களில் பணியிடை முன் பயிற்சியை தற்காலிகமாக நிறுத்தி வைக்கவும், 12 மாவட்டங்களில் இரண்டு பயிற்சிகளையும் நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இடங்கள் பூர்த்தி செய்யப்படும். மாணவர்கள் விரும்பினால் எதிர்காலத்தில் அதிக அளவில் டிடிஎட் பயிற்சி அளிக்க வழிவகை செய்யப்படும். ஆசிரியர் பயிற்சி பள்ளிகளை மூடும் எண்ணம் அரசுக்கு இல்லை.

No comments:

Post a Comment

Please Comment