தமிழில் நீட் தேர்வு எழுதியவர்களுக்கு கருணை மதிப்பெண் விவகாரம்... 20இல் விசாரிக்கிறது சுப்ரீம் கோர்ட் - ThulirKalvi Blogs

Latest

Search This Site

தமிழில் நீட் தேர்வு எழுதியவர்களுக்கு கருணை மதிப்பெண் விவகாரம்... 20இல் விசாரிக்கிறது சுப்ரீம் கோர்ட்

நீட் தேர்வில் தமிழில் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் 20ஆம் தேதி விசாரணை நடத்துகிறது.
நீட் தேர்வு வினாத்தாள் ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டதில் நிறைய குளறுபடிகள் செய்யப்பட்டுள்ளன. இந்த பிரச்சனையில் மார்க்சிஸ்ட் கட்சி ராஜ்யசபா உறுப்பினர் டி.கே.ரங்கராஜன், ஹைகோர்ட் மதுரை கிளையில் வழக்கு தொடுத்தார்.

49 வினா-விடைகள் தவறாக இருந்ததால் கேள்விக்கு 4 மதிப்பெண் என்று மொத்தமாக தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு கூடுதலாக 196 மதிப்பெண் வழங்க வேண்டும் என்று மதுரை கிளை கடந்த 15-ஆம் தேதி தீர்ப்பளித்தது.

இதை எதிர்த்து சிபிஎஸ்இ ஆணையம் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளது.இந்த வழக்கை உச்சநீதிமன்றம் 20ஆம் தேதி விசாரணை நடத்துகிறது. முன்னதாக சிபிஎஸ்இ மேல்முறையீடு செய்தால் தங்கள் கருத்தையும் கேட்க வேண்டும் என்று டி.கே ரங்கராஜன் மனுவில் கோரியுள்ளது குறிப்பிடத்தக்கது.

source: oneindia.com

No comments:

Post a Comment

Please Comment