ஆதார் அட்டை பயன்பாட்டினால் மத்திய அரசுக்கு ரூ.90 ஆயிரம் கோடி மிச்சமாகியுள்ளதாக ஒருங்கிணைந்த ஆதார் அட்டை ஆணைய தலைவர் கூறினார்.
ஆதார் அட்டை பயன்பாட்டினால் மத்திய அரசுக்கு ரூ.90 ஆயிரம் கோடி மிச்சமாகியுள்ளதாக ஒருங்கிணைந்த ஆதார் அட்டை ஆணைய தலைவர் கூறினார். இது குறித்து ஒருங்கிணைந்த ஆதார் அடையாள அட்டை ஆணையத்தின் தலைவர் ஜெ., சத்தியநாராயணா ஐதராபாத்தில் நடந்த நிகழ்ச்சியில் கூறியது, ஆதார் அட்டையினை தினமும் சராசரியாக மூன்று கோடி பேர் ரேசன்,ஒய்வூதியம், ஊரக வேலைவாய்ப்பு,கல்வி உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு பயன்பாட்டிற்கு உபயோகப்படுத்துகின்றனர்.
தவிர ஆதார் பயன்பாட்டினால் ரூ. 90 ஆயிரம் கோடி வரை மத்திய அரசுக்கு செலவு மிச்சமாகியுள்ளது.இதில் மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு, உணவு மற்றும் பொது விநியோகத்திட்டம், ஊரக வேலைவாய்ப்பு ஆகிய துறைகளில் செலவு மிச்சமாகியும்,சேமிப்பும் ஏற்பட்டுள்ளது என்றார்.
No comments:
Post a Comment
Please Comment