ஆன்லைனில் வேளாண் பொருள் விற்பனை; புதியசெயலி அறிமுகம் - ThulirKalvi Blogs

Latest

Search This Site

ஆன்லைனில் வேளாண் பொருள் விற்பனை; புதியசெயலி அறிமுகம்

ஆன்லைனில் வேளாண் பொருள் விற்பனை; புதியசெயலி அறிமுகம்


திண்டுக்கல் : வேளாண் பொருட்களை வீட்டில் இருந்தப்படியே ஆன்லைனில் விற்பனை செய்ய 'இ.நாம்'எனும் புதிய செயலியை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.வேளாண் விளைபொருட்களை ஆன்லைன் மூலம் விற்க 'இ.நாம்' எனும் தேசிய வேளாண் விற்பனை சந்தையை மத்திய அரசு துவங்கியது. இந்த சந்தையோடு 585 வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள் இணைக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் 23 இடங்களில் ஆன்லைன் சந்தை அமைக்கப்பட்டுள்ளது. இன்னும் கூடுதலாக 7 இடங்களில் அமைய உள்ளது.விவசாயிகள் அவர்களுக்கான மொழியை தேர்வு செய்து விவசாயிகள், வியாபாரிகள், மண்டிகள், பொருட்கள்மற்றும் விலையை அறியலாம். 


மேலும் இந்த சந்தையில் இணைய விரும்பும் விவசாயிகளும் அதில்பெயர், ஊர், விளைபொருள், இருப்பு நிலவரம், வங்கி விவரத்தைபதிவு செய்து விற்பனை செய்யலாம். வியாபாரிகளும் தங்களது விபரம்,தேவையான சரக்கு போன்ற தகவல்களை பதிவு செய்து வீட்டில் இருந்த படியே கொள்முதல் செய்யலாம். கொள்முதல் பணம் விவசாயிகள் வங்கிக்கணக்கில் நேரடியாக செலுத்தப்படும். இதனால் விலையை விவசாயிகளே நிர்ணயிக்கலாம், இடைத்தரகர்கள் தொல்லை இருக்காது. இந்த செயலி மூலம் விவசாயிகள் பயன்பெறலாம், என வேளாண் அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

Please Comment