துணை முதல்வர் ஓபிஎஸ் தகவல்: அரசு ஊழியர்கள் வீடுவாங்க 40 லட்சம் முன்பணம் Loan
அரசு ஊழியர்கள் வீடுவாங்க 40 லட்சம் முன்பணம் விரைவில் வழங்கப்படும் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்தார். சட்டப் பேரவையில் நேற்று விட்டுவசதி மற்றும் நகர்ப்புற வர்ச்சித்துறை மானியக் கோரிக்கை விவாதத்தின் போது உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விக்களுக்கு பதிலளித்த துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் பேசியதாவது. நகர குடிசைப்பகுதிவாழ் குடும்பங்களின் வீட்டுவசதித் தேவைகளை நிறைவேற்றும் வகையில் கடந்த ஏழு ஆண்டுகளில், 5,415.29 கோடி ரூபாய் செலவில் 1.02 லட்சம் வீடுகள்,குடியிருப்புகளை அரசு கட்டிக் கொடுத்துள்ளது. தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியத்தால் தற்பொழுது கட்டப்படும் அடுக்குமாடிக் குடியிருப்புகள் 400 சதுர அடி கட்டடப் பரப்பில் கட்டப்படுகின்றன.
சென்னை - பெங்களூர் நெடுஞ்சாலையில் உள்ள திருமழிசையில் 311.05 ஏக்கர் நிலபரப்பில் துணைக்கோள் நகரம் அமைக்கப்படும் என அறிவித்ததன் அடிப்படையில், திட்டத்தில் பகுதிவாரியாக செயல்படுத்தப் பணிகளில் நடை பாதைகள் அமைக்கும் பணி மற்றும் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையை திட்ட பகுதியுடன் இணைக்க இணைப்பு சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மேம்பாட்டு பணிகள் ஆகஸ்ட் 2018ல் முடிவுறும் என எதிர்நோக்கப்படுகிறது. அரசு ஊழியர்கள் சொந்தமாக வீடுவாங்கிட வழிவகை செய்யும் வீட்டுவசதி முன்பணம் 25 லட்சத்தில் இருந்து 40 லட்சமாக உயர்த்துவது தொடர்பாக ஆணை விரைவில் வெளியிடப்படும்.
சென்னையில் கொரட்டூர், வேளச்சேரி, பருத்திபட்டு மற்றும் அம்பத்தூர் ஆகிய நான்கு இடங்களிலும் மதுரை, அண்ணா நகரிலும் அம்மா திருமண மண்டபங்கள் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன. பொதுமக்களின் வசதிக்கென, தேவையான அனைத்துத் தடையின்மைச் சான்று, திட்ட அனுமதி மற்றும் கட்டட அனுமதி வழங்கும் துறைகளை சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம், ஒரே வாயிலில் இணைக்கும் வகையில், இந்தியத் தொழில் நுட்பக் கழகம், சென்னை மற்றும் தேசிய தகவலியல் மையம் ஆகிய நிறுவனங்களின் உதவியுடன் ஒற்றைச் சாளர முறை உருவாக்கப்பட உள்ளது.
எந்த ஒரு கட்டடத்தையோ அல்லது மனைப் பிரிவையோ (500 சதுர மீட்டர் நிலப்பரப்பளவுக்கு மேல் அல்லது 8 குடியிருப்புகளுக்கு மேல்) விளம்பரம் அல்லது விற்பனை செய்வதற்கு முன், முறையாக திட்ட அனுமதி மற்றும் கட்டட அனுமதி பெற்றபின் குழுமத்தில் பதிவு செய்ய வேண்டும். ஓய்வு பெற்ற சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர்திரு. ராஜேந்திரன் கட்டட, மனை விற்பனை (முறைப்படுத்தல் மற்றும் மேம்படுத்தல்) சட்டம், 2016-ன்படி அமைக்கப்பட்டுள்ள கட்டட, மனை விற்பனை மேல்முறையீட்டுத் தீர்ப்பாயத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் பல திட்டங்களை நிறைவேற்றி வீட்டு வசதி மற்றும் அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த தொடர்ந்து நடவடிக்கைகளை மேற்கொள்ளும். இவ்வாறு தெரிவித்தார்.
கட்டிடங்களை வரன்முறைபடுத்த டிசம்பர் 20 வரை அவகாசம்
கட்டிடங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட 15 மீட்டர் கட்டட உயரத்தை தளர்த்தி 17 மீட்டர் அளவுக்கு உயர்த்தி அனுமதி வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. கட்டடம் கட்டுவதற்கு திட்டஅனுமதி விண்ணப்பங்கள் கணினி வழியாக பெறப்பட்டு சிறப்பு கட்டடங்களுக்கு 33 நாட்களிலும் பல அடுக்குமாடி கட்டடங்களுக்கு 66 நாட்களிலும் திட்ட அனுமதி வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. அனுமதியற்ற கட்டடங்களை வரன்முறைப்படுத்தும் திட்டம் 20.12.2018 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. நகர் ஊரமைப்புத் துறை பகுதியில் 41,024 அனுமதியற்ற மனைப்பிரிவுகள் உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. உள்ளாட்சி அமைப்புகளால் இதுவரை 1,36,363 மனைகள் வரன்முறைப்படுத்தப்பட்டுள்ளன.
கட்டிடங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட 15 மீட்டர் கட்டட உயரத்தை தளர்த்தி 17 மீட்டர் அளவுக்கு உயர்த்தி அனுமதி வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. கட்டடம் கட்டுவதற்கு திட்டஅனுமதி விண்ணப்பங்கள் கணினி வழியாக பெறப்பட்டு சிறப்பு கட்டடங்களுக்கு 33 நாட்களிலும் பல அடுக்குமாடி கட்டடங்களுக்கு 66 நாட்களிலும் திட்ட அனுமதி வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. அனுமதியற்ற கட்டடங்களை வரன்முறைப்படுத்தும் திட்டம் 20.12.2018 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. நகர் ஊரமைப்புத் துறை பகுதியில் 41,024 அனுமதியற்ற மனைப்பிரிவுகள் உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. உள்ளாட்சி அமைப்புகளால் இதுவரை 1,36,363 மனைகள் வரன்முறைப்படுத்தப்பட்டுள்ளன.
வண்டலூரில் புறநகர் பேருந்துநிலைய பணி
கோயம்பேட்டில் உள்ள சென்னைப் புறநகர் பேருந்து நிலையத்தில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும், தென்மாவட்டங்களிலிருந்து சென்னையை நோக்கிவரும் புறநகர் பேருந்துகளால் பெருகிவரும் பேருந்து போக்குவரத்தினைக் கருத்தில் கொண்டு, வண்டலூரில் புறநகர் பேருந்து நிலையம் அமைக்கும் திட்டம் அறிவிக்கப்பட்டது. அரசு இத்திட்டத்தினைச் செயல்படுத்த 376 கோடி மதிப்பீட்டில் நிர்வாக ஒப்புதல் வழங்கியுள்ளது. இப்பேருந்து நிலையத்தை மேம்படுத்த விரிவான திட்ட அறிக்கை முடிவுறும் தருவாயில் உள்ளது. இதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்படும்.
No comments:
Post a Comment
Please Comment