புதிய பாடத்திட்டத்தை கற்பிப்பது எப்படி?
புதிய பாடத்திட்டத்தை கற்பிப்பது தொடர்பாக, ஆசிரியர்களுக்கு நேற்று பயிற்சி துவங்கியது.தமிழகத்தில், மாநில பாடத்திட்டத்தை பின்பற்றும், ஒன்று, ஆறு, ஒன்பது, பிளஸ்1 வகுப்புகளுக்கு, புதிய பாடப்புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது. சிலபஸ் மாற்றிய பின், ஆசிரியர்களுக்கான பயிற்சி, நேற்று துவங்கியது. வரும் 24ம்தேதி நிறைவடைகிறது. ஒன்றாம் வகுப்புக்கு அந்தந்த ஒன்றியத்திலும், ஆறு, ஒன்பதாம் வகுப்புகளுக்கு, கல்வி மாவட்ட அளவிலும் பயிற்சி அளிக்கப்படுகிறது. ஆறு, ஒன்பதாம் வகுப்பு பாடப்புத்தகங்களில், பொது அறிவு சார்ந்த தகவல்கள் அதிகம் இடம் பெற்றுள்ளன. இதை, மாணவர்களுக்கு புரியும் விதத்தில் கற்பிப்பது குறித்து, ஆசிரியர்களுக்கு, 'ஸ்மார்ட் போர்டு' கொண்டு விளக்கப்பட்டது.தமிழ், கணிதம், வணிகவியல் பாட முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான பயிற்சி, ஈச்சனாரி, ரத்தினம் கலை அறிவியல் கல்லுாரியில் நடக்கிறது.
இப்பயிற்சியில், பாடப்பகுதியில் உள்ள 'லிங்க் ', 'க்யூ.ஆர்.கோடு' பயன்படுத்தும் முறை குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.பிளஸ் 1 வகுப்பில், அனைத்து பாடப்புத்தகங்களிலும், இடம் பெற்றுள்ள துறை சார்ந்த படிப்புகள், வேலைவாய்ப்பு தகவல்களை, புதுமையான முறையில் கற்பிப்பது குறித்து, விளக்கம் அளிக்கப்பட்டது.தமிழ் பாட கருத்தாளர் அமலிலுாசியா கூறுகையில்,''தமிழ் பாடத்தை மாணவர்கள் விரும்பி படிக்கும் வகையில், சிலபஸ் தயாரிக்கப்பட்டுள்ளது.. மதிப்பீட்டு முறையிலும் மாற்றம் கொண்டு வரப்படவுள்ளது. குறிப்பிட்ட கேள்விக்கு, பாடத்திட்டம் தாண்டி,மாணவர்களே சுயமாக கருத்துக்களை எழுத, ஆசிரியர்கள் பழக்க வேண்டும்,'' என்றார்.
No comments:
Post a Comment
Please Comment