நீங்கள் வாட்ஸ் அப் பயன்படுத்துபவரா?..உங்களுக்கு இது கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும் - ThulirKalvi Blogs

Latest

Search This Site

நீங்கள் வாட்ஸ் அப் பயன்படுத்துபவரா?..உங்களுக்கு இது கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும்

நீங்கள் வாட்ஸ் அப் பயன்படுத்துபவரா?..உங்களுக்கு இது கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும்


வாட்ஸ் அப்பில் பரப்பப்படும் வதந்தியாவில் இது வரை இந்தியாவில் 24 பேருக்கு மேல் உயிரிழந்துள்ளனர். இதனால் போலி செய்திகள் மற்றும் வதந்தி பரவுவதை தடுக்கும் வகையில் வாட்ஸ் அப் நிறுவனத்தை நிர்வகித்து வரும் பேஸ்புக் நிறுவனம் 10 முக்கிய காரணிகளை தெரிவித்து விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறது. நண்பர்கள், குடும்பத்தினர் மத்தியில் வாட்ஸ் அப் மூலம் தகவல்களை பகிர்ந்து கொள்ளும் இந்தியர்கள் இதை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று அந்நிறுவனம் கேட்டுக் கொண்டுள்ளது.
1. போலி தகவல்கள் பெரும்பாலும் பார்வேர்டட் மெசேஜ் மூலம் பரவுகிறது. அதனால் பார்வேடட் மெசேஜ்கள் மீது எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

வாட்ஸ் அப்பில் வரும் ஒரு மெசேஜ் பார்வேர்டட் செய்யப்பட்டதா?, அல்லது அனுப்பிய நபரால் சுயமாக தயாரிக்கப்ட்டதா? என்பதை அறிய முடியாத நிலை இருந்தது. இந்த நிலை தற்போது மாற்றப்பட்டுள்ளது. இன்று முதல் இதை கண்டுபிடிக்க பிரத்யேக வசதி வாட்ஸ் அப்பில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், இந்த வசதி அனைத்து பயனீட்டாளருக்கும் கிடைக்கும் வகையில் வாட்ஸ் அப் செய்யவில்லை.
2. மெசேஜின் தோற்றத்தை பார்த்து உடனடியாக ஒரு முடிவுக்கு வரக் கூடாது. உதாரணமாக இமாச்சலில் உள்ள ஒரு ஆரஞ்சு மரத்தில் மாங்காய் காய்க்கிறது என்று தகவல் வந்தால் அதை நம்புவதற்கு முன்பு ஆய்வு செய்ய வேண்டும்.
3. உங்களை ஆத்திரமூட்டும் வகையில் ஒரு செய்தி வந்தால் உடனடியாக பதில் தெரிவிக்காமல் அந்த தகவலின் நம்பகத்தன்மையை உறுதி செய்த பின்னரே பதிலளிக்க வேண்டும்.
4. அதிகமாக வைரலாகும் தகவல்கள் மீது கவனமாக இருக்க வேண்டும். இத்தகைய தகவல்களுக்கு ஸ்மைலீஸ் உள்ளிட்ட பிரதிபலிப்புகள் அதிகம் இருந்தாலும் கட்டாயம் தகவலை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
5. போட்டோஷாப்பில் வேலைப்பாடுகள் செய்யப்பட்ட புகைப்படங்கள் பரவலாம். அதனால் இத்தகைய புகைப்படங்கள் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
6. போட்டோவுடன் அனுப்பப்படும் லிங்கையும் மாற்றி அமைக்க கூடிய சாத்தியக் கூறுகள் இருக்கிறது. அதனால் பெரிய இணைய தள முகவரில் இருந்து புகைப்படம் பகிரப்பட்டாலும் அதன் உண்மைத் தன்மையை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
7. வதந்தி, போலி செய்திகளை எதிர்கொள்ள ஒரு அருமையான யோசனை. அனைத்து தகவல்களையும் வாட்ஸ் அப் மூலம் பெறக் கூடாது. அதோடு செய்திதாள் அல்லது டிவி செய்திகள் போன்றவற்றோடு வாட்ஸ் அப் தகவல்களை ஒப்பிட்டு உறுதி செய்து கொள்ள வேண்டும்.
8. ஒரு தகவலை உறுதிப்படுத்தாமல், அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்யாமல் எந்த ஒரு மெசேஜையும் பார்வேர்ட் செய்யக் கூடாது.
9. ஒரு நபரோthulir அல்லது ஒரு குறிப்பிட்ட செல்போன் நம்பர் தவறான, போலியான, வதந்தி செய்திகளை பரப்புவதை கண்டுபிடித்தால் உடனடியாக அவரை பிளாக் செய்துவிட வேண்டும்.

10. வதந்தி பரவுவது வாட்ஸ் அப் நிறுவனத்திற்கு சங்கடம் ஏற்படுத்தியுள்ளது. அதோடு மக்களும் பாதி க்கப்படுகின்றனர். அதனால் வைரலாகும் மெசேஜ்கள் மீது எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

No comments:

Post a Comment

Please Comment