நீரின் குணங்கள் - ThulirKalvi Blogs

Latest

Search This Site

நீரின் குணங்கள்

நீரின் மருத்துவ குணங்கள் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டியவை (Healing power of Water Revealed)

நீங்கள் எதற்காக மருத்துவரிடம் சென்றாலும், நிச்சயம் இந்த அறிவுரையை மருத்துவர் கூறுவார், அதிகம் நீர் பருகுங்கள் என்பார்! உடலுக்கு காற்றைப் போல, நீரும் முக்கியமாகும். நமது உடல்நலத்திற்கு நீரின் பங்களிப்பு குறித்து எண்ணற்ற ஆராய்ச்சிகள் செய்யப்பட்டுள்ளன, கட்டுரைகள் வந்துள்ளன. நாம் அருந்தும் நீரின் தரம் முக்கியமாகும்.
தினசரி நீர் நமக்கு எப்படியெல்லாம் நன்மை அளிக்கிறது என்று இங்கு பட்டியலிடுவோம்:
உங்கள் சருமத்தை சுத்தமாகவும் பொலிவாகவும் வைத்துக்கொள்கிறது.
உடலில் இருந்து நச்சுகளை வெளியேற்றுகிறது.
உடலைக் குளிர்ச்சியடையச் செய்கிறது.
ஆரோக்கியமான வளர்சிதை மாற்றத்திற்கு உதவுகிறது.
செரிமானம் சீராக நடக்க உதவுகிறது
மூட்டுகளுக்கு வழவழப்பு கூட்டுகிறது.
நீரிழப்பைத் தடுக்கிறது
பட்டியல் இதோடு முடிவடையவில்லை.

போதுமான அளவு சுத்தமான நீர் அருந்துவது, பல நோய்களையும் மருத்துவப் பிரச்சனைகளையும் தடுக்க உதவும், சிலவற்றை குணப்படுத்தவும் உதவும். அவற்றில் சில:
கீல்வாதம் (Arthritis):
மூட்டுகளில் அழற்சி மற்றும் இறுக்கம் ஏற்படுவதால் கீல்வாதம் ஏற்படுகிறது. இந்த வலி நீடிக்கும் காலமும் வலியின் கடுமையும் ஒவ்வொருவருக்கும், ஒவ்வொரு நாளும் மாறுபடும். கீல்வாதத்தில் இருந்து நிவாரணம் பெற மிகச் சில வழிகளே உள்ளன, அவற்றில் பலருக்கு நீர் அருந்துவது மிகவும் உதவிகரமாக இருந்துள்ளது. நீர், மூட்டுகளுக்கு வழவழப்பை அளிப்பது மட்டுமின்றி, வலியை ஏற்படுத்துகின்ற உராய்வைக் குறைக்கவும் உதவுகிறது.
மலச்சிக்கல் (Constipation)
மலச்சிக்கல் பல்வேறு காரணங்களால் ஏற்படுகிறது, ஆனால் விளைவு ஒன்றே தான். அந்த வலி மிகுந்த, சங்கடமான பிரச்சனை தினசரி வாழ்க்கையையே கடினமாக்கிவிடும். உணவில் போதுமான அளவு நார்ச்சத்துகளை சேர்த்துக்கொள்ள வேண்டியது செரிமானம் நன்றாக நடக்க முக்கியமாகும், அதேபோல் போதுமான அளவு நீர் அருந்துவதும் தேவையற்ற நச்சுகளை உடலில் இருந்து அகற்றுவது மட்டுமின்றி, மலம் கழித்தல் செயலையும் எளிதாக்க உதவும்.

தலைவலி (Headaches)
சிலருக்கு, ஒற்றைத் தலைவலி மற்றும் தலைவலிக்கு நீரிழப்பு காரணமாக இருக்கிறது. போதுமான அளவு நீர் அருந்துவது, நீரிழப்பினால் ஏற்படும் தலைவலியைக் குறைக்க உதவுகிறது, தலைவலியின் தாக்கத்தையும் நீடிக்கும் நேரத்தையும் குறைக்கவும் உதவுகிறது என்று சில ஆய்வுகள் கூறுகின்றன.
நீரிழிவு நோய் (Diabetes)
போதுமான நீர் அருந்துவது, உங்கள் இரத்தத்தில் நீர்ச்சத்தை தக்கவைத்துக்கொள்ள உதவுகிறது, இதனால் அளவுக்கு அதிகமாக உள்ள குளுக்கோசை சிறுநீரின் வழியாக வெளியேற்ற உடல் முயற்சிக்கிறது.
நீரை அருந்தினால் மட்டும் நன்மையென்று இல்லை. நீரில் குளிப்பது, நீந்துவதும் மன அழுத்தத்தைக் குறைக்கவும் மனநிலையை நன்றாக வைத்துக்கொள்ளவும் உதவும். குளிர் நீரில் குளிப்பது, விழிப்புணர்வை அதிகரிக்கும், இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும், நீர்நிலையில் சிறிது நேரம் இருப்பது மன நலத்தை மேம்படுத்தும் என்றும் கூறப்படுகிறது.

No comments:

Post a Comment

Please Comment