"பள்ளி ஆசிரியர்களால் மட்டுமே நல்ல மாணவ சமுதாயத்தை உருவாக்க முடியும்'
பள்ளி ஆசிரியர்களால் மட்டுமே நல்ல மாணவ சமுதாயத்தை உருவாக்க முடியும் என்றார் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக அயல்நாட்டுத் தமிழ் கல்வித் துறைத் தலைவர் இரா. குறிஞ்சிவேந்தன்.
மயிலாடுதுறை திருக்குறள் பேரவையின் முன்னாள் செயலாளர் ந. கலியபெருமாள் நினைவாக நற்றமிழர் ந.க. அறக்கட்டளைத் தொடக்க விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
மயிலாடுதுறையில் நடைபெற்ற இவ்விழாவுக்கு, திருக்குறள் பேரவைத் தலைவர் சி.சிவசங்கரன் தலைமை வகித்தார். செயலாளர் சிவ. கோபாலகிருஷ்ணன், துணைத் தலைவர் இரெ. செல்லத்துரை, செம்பனார்கோவில் தமிழ்ப் பேரவை இரா. ராஜசேகர், பெரியார் திராவிடர் கழகத்தைச் சேர்ந்த ரஷீத்கான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக அயல்நாட்டுத் தமிழ் கல்வித் துறைத் தலைவர் இரா. குறிஞ்சிவேந்தன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, "கற்க நிற்க' எனும் தலைப்பில் பேசியது:
இந்தியா விடுதலை அடைந்தபோது, 20 சதவீதத்தினர் மட்டுமே படித்தவர்களாக இருந்தனர். அக்காலகட்டங்களில் அதிக கல்வி நிலையங்கள் இல்லாவிட்டாலும், தரமான கல்வி போதிக்கப்பட்டது. ஆனால், தற்போது பல்வேறு கல்வி நிலையங்கள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் இருந்தும் தரமான கல்வி மாணவர்களுக்குப் போதிக்கப்படுவதில்லை என்பதை நாம் உணரவேண்டும்.
இந்தியா விடுதலை அடைந்தபோது, 20 சதவீதத்தினர் மட்டுமே படித்தவர்களாக இருந்தனர். அக்காலகட்டங்களில் அதிக கல்வி நிலையங்கள் இல்லாவிட்டாலும், தரமான கல்வி போதிக்கப்பட்டது. ஆனால், தற்போது பல்வேறு கல்வி நிலையங்கள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் இருந்தும் தரமான கல்வி மாணவர்களுக்குப் போதிக்கப்படுவதில்லை என்பதை நாம் உணரவேண்டும்.
எதிர்கால இந்தியா மாணவ சமுதாயம் கையில் உள்ளது. பல்கலைக்கழக ஆசிரியர்களால், எளிதில் நல்ல மாணவ சமுதாயத்தை உருவாக்க முடியாது. ஆனால், பள்ளி ஆசிரியர்களால் நல்ல மாணவ சமுதாயத்தை உருவாக்க முடியும் என்பதால், ஆசிரியர்கள் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றவேண்டும் என்றார்.
முன்னதாக, வழக்குரைஞர் நா.கு. கிருஷ்ணமூர்த்தி அறக்கட்டளையை தொடங்கி வைத்தார். மேகனா இண்டர்நேஷனல் பள்ளித் தாளாளர் க. பாண்டியன் அறக்கட்டளை நிர்வாகிகளை அறிமுகம் செய்து வைத்தார்.
மருத்துவர் ந. சிவக்குமார், தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம் நாகை மாவட்டத் தலைவர் த. அமிர்தகுமார், டி.பி.டி.ஆர். தேசிய மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் ஆர். காஞ்சிநாதன், திருக்குறள் பேரவை அமைப்புச் செயலாளர் சா.மீ.சு. முத்துச்செல்வன், தேரழந்தூர் கம்பன் கழகத் தலைவர் முத்து. ஜானகிராமன் உள்ளிட்டோர் வாழ்த்துரையாற்றினர். ஆசிரியை கவிதை வெங்கடேசன் வரவேற்றார். ந.க. ராஜ்குமார் ஏற்புரையாற்றினார். ந.க. விஜய்குமார் நன்றி கூறினார்.
விழாவில், அறக்கட்டளை சார்பில் பள்ளி மாணவர்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டன. மயிலாடுதுறை எம்எல்ஏ வீ. ராதாகிருஷ்ணன், முன்னாள் எம்எல்ஏ ஜெகவீரபாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment
Please Comment