கனவு ஆசிரியர் விருது
தமிழகத்தில் செயல்படும் அனைத்து வகை அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களில் சிறந்த ஆசிரியர்களுக்கு '' கனவு ஆசிரியர் விருது'' வழங்கப்படும் என 2017-2018 கல்வி மானியக் கோரிக்கையில் அறிவிக்கப்பட்டது.
இதன்படி அரசுப் பள்ளிகளில் கணினி வசதிகளுடன் பாடங்களை கையாளும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பள்ளியின் நலனுக்காக சமூக உறுப்பினர்களோடு ஒருங்கிணைந்து செயல்படும் ஆசிரியர்கள், மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்தும் ஆசிரியர்கள், கல்வி இணைச் ெ சயல்பாடுகள் ஆகியவற்றில் சிறந்து விளங்கும் ஆசிரியர்கள் ஆகியோரை ஊக்குவிக்கும் வகையில் 192 ஆசிரியர்களுக்கு கனவு ஆசிரியர் விருது வழங்கப்படும்.. இந்த ஆண்டு கனவு ஆசிரியர் விருது வழங்க பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ள நிலையில் 150 ஆசிரியர்கள் இந்த விருதுக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கு பாராட்டு சான்றிதழ், ரூ.10 ஆயிரம் பரிசும் வழங்கப்படும்.
No comments:
Post a Comment
Please Comment