இஎம்ஐஎஸ் இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர்கள் நியமனம் செய்ய முடிவு விவரங்கள் தயாரிக்கும் பணிகள் தீவிரம்
வேலூர், ஜூலை 4: இஎம்ஐஎஸ் இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர்கள் நியமிப்பதற்கான விவரங்களை தயாரிக்கும் தீவிரமாக நடந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்குவதற்தாக பள்ளி கல்வி மேலாண்மை இணையதளம் (இஎம்ஐஎஸ்) என்று தொடங்கப்பட்டுள்ளது. இந்த இணையதளத்தில் ஒன்று முதல் பிளஸ்2 வகுப்பு வரை படிக்கும் மாணவர்களின் பெயர், முகவரி, பள்ளி விவரம், பெற்றோர் விவரம் உள்ளிட்ட பொதுவான தகவல்கள் மற்றும் ரத்த வகை, எடை உயரம் உள்ளிட்ட விவரங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளது....
ஒவ்வொரு கல்வியாண்டிலும் கூடுதலாக ஒவ்வொரு விவரமும் இந்த பட்டியலில் சேர்ந்து கொண்டே இருக்கும்...
அதை அந்தந்த பள்ளி தலைமையாசிரியர்கள் பதிவேற்றம் செய்து கொள்ள வேண்டும என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் அரசு மற்றும் நிதியுதவி பெறும் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர்கள் அதிகளவில் இருப்பதாகவும், ஒருசில பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கையை விட குறைந்த அளவில் ஆசிரியர்கள் இருந்து வருவதாகவும் புகார் எழுந்துள்ளது. மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப மட்டுமே ஆசிரியர்கள் நியமனம் செய்ய பள்ளிக்கல்வி துறை இயக்குனரகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
இதுகுறித்து பள்ளிக்கல்வி அதிகாரிகள் கூறியதாவது: பள்ளிக்கல்வித்துறை செயலாளர் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடந்தது. அப்ேபாது, நடப்புக் கல்வியாண்டில் 2018-19 இஎம்ஐஎஸ் இணையதளத்தில் பதிவு செய்யப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கைக்கு தகுந்தவாறு ஆசிரியர்களின் எண்ணிக்கை முடிவு செய்யப்பட உள்ளது. இதற்கான விவரங்கள் அந்தந்த மாவட்ட கல்வி அலுவலகங்களிலிருந்து தகவல்கள் கோரப்பட்டுள்ளது.
எனவே, 2018-19ம் கல்வியாண்டிற்கான இஎம்ஐஎஸ் இணையதளத்தில் புதிதாக வந்த ஆசிரியர்கள், கலந்தாய்வு மூலம் இடமாற்றம் செய்யப்பட்ட ஆசிரியர்களின் விவரங்கள் பதிவு செய்யும் நடந்து வருகிறது. இந்த பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் இந்த தகவல்களின் அடிப்படையில் தான் மாணவர்களுக்கான நலத்திட்டங்கள் அனைத்தும் பின்பற்றப்பட்டு வருகிறது. எனவே இதில் எந்த ஒரு விவரம் தடைபட்டாலும் அதற்கு முழு பொறுப்பு தலைமை ஆசிரியர்களை தான் சாரும். எனவே குறித்த தேதிகளுக்குள் அனைத்து விவரங்களும் அந்தந்த முதன்மை கல்வி அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
No comments:
Post a Comment
Please Comment