உணவை வீணாக்காதீர்கள்,மீறினால் அபராதம் .,அரசு வெளியிட்ட அதிரடி சட்டம் .!
சவுதி அரேபியாவில் பொதுமக்களால் வீணாக்கப்படும் உணவுக்கு அபராதம் விதிக்க அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சவுதி அரேபியாவில் நாளுக்கு நாள் உணவுகள் வீணாக்கப்படுவது அதிகரித்துக்கொண்டே போகிறது. உண்ணஒரு வேலை உணவு கூட இல்லாமல் அவதிப்படும் மக்கள் இருக்கும் நிலையில் சவுதி அரேபியாவில் நாள் ஒன்றுக்கு தயாராகும் உணவுகளில் சுமார் 40 சதவீதம் உணவு வீணாகுவதாக ஆய்வுஅறிக்கை வெளிவந்துள்ளது.
அது மட்டுமின்றி உலகில் உணவு பண்டங்களை வீணாக்கும் நாடுகளில் சவுதி அரேபியா முதலிடத்தில் இருப்பதாகவும் உணவு மற்றும் வேளாண் அமைப்பு அறிக்கை வெளியிட்டது.
இதனையடுத்தே இனி சவுதி அரேபியாவில் உணவு பதப்படுத்தும் நிலையம், உணவகங்கள் மற்றும் திருமண மண்டபம் போன்ற நிகழ்ச்சிகளில் வீணடிக்கப்படும் ஒவ்வொரு கிலோ உணவுக்கும் ஆயிரம் ரியால் அபராதம் விதிக்கபடும் என அமைச்சரவை முடிவு செய்துள்ளது.
மேலும் இந்த சட்டத்தை மீறும் நிறுவனங்களின் உரிமையை ரத்து செய்து நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது .
No comments:
Post a Comment
Please Comment