மாணவர்களுக்கு சட்ட அறிவு அவசியம்:நீதிபதிகள் அறிவுரை
மாணவர்களுக்கு சட்ட அறிவு அவசியம்' என, ஊட்டியில் நடந்த விழிப்புணர்வு முகாமில் நீதிபதிகள் அறிவுரை வழங்கினர்.நீலகிரி மாவட்டத்தில், 5 ஒன்றியங்களில் உள்ள அரசு பள்ளிகளில், சட்ட அறிவுக்குழு ஏற்படுத்துவதற்கான, ஊட்டி, குன்னுார், கோத்தகிரி, கூடலுார், பந்தலுார் அரசு மேல்நிலைப்பள்ளிகள் முதற்கட்டமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.இதை செயல்படுத்துவதற்கான சட்ட விழிப்புணர்வு முகாம், ஊட்டி பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில், சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் நடந்தது.சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி உலுவாடி ரமேஷ் பேசுகையில், ''மாணவ, மாணவியர் இடையே சட்ட விழிப்புணர்வு ஏற்படுத்துவது வருங்காலங்களில் அவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும்.
பிரச்னைகளை எதிர்கொண்டு தீர்க்க முடியாமல் தவித்து வரும்போது, இது போன்ற சட்ட விழிப்புணர்வு மன தைரியத்தைக் கொடுக்கும். இதனால், தங்களை பாதுகாத்து கொள்ள ஏதுவாக அமையும்,'' என்றார்.முகாமில் நீலகிரி மாவட்ட நீதிபதி வடமலை பேசுகையில், ''நாட்டின் வருங்கால துாண்களாக இருக்கும் மாணவ, மாணவியருக்கு சட்ட அறிவு அவசியம் தேவை. இதற்காக பள்ளிகளில் தற்போது குழுக்கள் ஆரம்பித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதால், தங்களின் பிரச்னைகளை தீர்த்துக்கொள்வதுடன், மன உறுதியும் அதிகரிக்கும்,'' என்றார்.முகாமிற்கு மாவட்ட வருவாய் அலுவலர் செல்வராஜ் தலைமை வகித்தார். எஸ்.பி., சண்முகப்பிரியா, நீலகிரி மாவட்ட வக்கீல்கள் சங்க தலைவர் ஸ்ரீஹரி, சட்டப்பணிகள் ஆணைக்குழு நீதிபதி சுரேஷ்குமார் உட்பட பலர் பேசினர்.தொடர்ந்து, மாணவியருக்கான பிரச்னைகளுக்கு தீர்வு காண்பது; தற்கொலை தவிர்ப்பது; மனதை திடப்படுத்துவது; சட்டத்தின் உதவியை நாடுவது உள்ளிட்ட கருத்துக்களை, குன்னுார் கல்வி மாவட்ட அலுவலர் அமுதவல்லி, கவிதையாக வாசித்தார்.ஊட்டி அரசு மேல்நிலைப்பள்ளி, பிரிக்ஸ் பள்ளி, சி.எஸ்.ஐ., பள்ளி மாணவ, மாணவியர், ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
5 பள்ளிகளுக்கு சட்டம் சார்ந்த விழிப்புணர்வு புத்தகங்கள், பள்ளிக்கு தேவையான தளவாட பொருட்கள் வழங்கப்பட்டன.
No comments:
Post a Comment
Please Comment