உலக பாம்புகள் தினத்தையொட்டி, கிண்டி, பாம்பு பண்ணையில் நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில், விலங்கியல் படிக்கும் மாணவியர், மண்ணுண்ணி பாம்பு மற்றும் பச்சோந்தியை கையில் பிடித்து, அச்சம் நீங்கியதை உணர்ந்தனர்.
உலக பாம்புகள் தினம், நேற்று அனுசரிக்கப்பட்டது.
கிண்டி, சிறுவர் பூங்கா அருகில், பாம்பு பண்ணை உள்ளது. இங்கு, 23 வகை பாம்புகள், ஐந்து வகை முதலைகள், நான்கு வகை ஆமைகள் உள்ளிட்ட, 38 வகை ஊர்வனங்கள் உள்ளன. பாம்புகள் தினத்தையொட்டி, நேற்று இங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. சுற்றுச்சூழல் மற்றும் கலாச்சாரத்தில், பாம்புகளின் பங்கினை உணர்த்தும் வகையில் நடந்த இந்நிகழ்ச்சியை, கூடுதல் தலைமை வனப்பாதுகாவலர், உதயன் துவக்கி வைத்தார்.விலங்கியல் படிக்கும் மாணவியர் மற்றும் ஆராய்ச்சி மாணவர்கள், இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.நல்லபாம்பு, பச்சைபாம்பு, நன்னீர் பாம்பு, சாரை உள்ளிட்ட பாம்புகளின் தன்மைகள், வாழ்க்கை முறைகள், உண்ணும் உணவு,பாம்புகள் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கைகள் மற்றும் அவ நம்பிக்கைகள் குறித்து, மாணவர்களுக்கு விளக்கப்பட்டது.பாம்புகளை கையில் எடுத்த பயிற்சியாளர், கண்ணாடி கூண்டுக்குள் நின்று காட்டி விளக்கினார்.
விஷமற்ற மண்ணுண்ணி பாம்பு மற்றும் பச்சோந்தியை, மாணவியர் கையில் கொடுத்தனர்.அப்போது, உயிரினங்கள் மீது இருந்த பயம் நீங்கியதாக, மாணவியர் உணர்ந்தனர். இதுபோன்ற செயல்விளக்கம், தினசரி, காலை, 11:00 மணி மற்றும் மதியம் 3:00 மணிக்கு, 20 நிமிடங்கள் நடத்தப்படும் என, பாம்பு பண்ணை நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

No comments:
Post a Comment
Please Comment