ரிமோட் மூலம் இயங்கும் மின்னணு பகுப்பாய்வு நுண்நோக்கி: சென்னை ஐஐடி-யில் உருவாக்கம் - ThulirKalvi Blogs

Latest

Search This Site

ரிமோட் மூலம் இயங்கும் மின்னணு பகுப்பாய்வு நுண்நோக்கி: சென்னை ஐஐடி-யில் உருவாக்கம்

உலக அளவில் முதன்முறையாக ரிமோட் மூலம் இயக்கக்கூடிய மின்னணு பகுப்பாய்வு நுண்நோக்கி (லீப்) சென்னை ஐஐடி-யில் உருவாக்கப்பட்டுள்ளது.




இந்தியாவின் 7 முன்னணி கல்வி நிறுவனங்களுடன் இணைந்து ரூ. 40 கோடி செலவில் சென்னை ஐஐடி இந்த வசதியை உருவாக்கியுள்ளது. உலோகங்களிருந்து அணுக்களைப் பிரித்தெடுக்கவும், அணு அளவீடுகளில் இருந்து ஒரு உலோகத்தை வடிவமைக்கவும் இந்த உயர் தொழில்நுட்ப நுண்நோக்கி உதவுகிறது. இந்த நுண்நோக்கிகள் ஏற்கெனவே பயன்பாட்டில் இருக்கின்றன என்றபோதும், ரிமோட் மூலம் இயக்கக்கூடிய நுண்நோக்கி உருவாக்குவது இதுவே முதன்முறையாகும். இந்த முப்பரிமாண நுண்நோக்கி அறிமுக விழா சென்னை ஐஐடி-யில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்ற இந்திய அறிவியல் தொழில்நுட்பத் துறைச் செயலர் பேராசிரியர் அசுதோஷ் சர்மா பேசியதாவது: 




ரிமோட் மூலம் இயங்கக் கூடிய முப்பரிமாண நுண்நோக்கி போன்று நாட்டின் கண்டுபிடிப்புகள் அதிக அளவிலான மக்கள் பயன்படுத்தக்கூடிய வகையில் , அறிவியல் உள்கட்டமைப்பு பராமரிப்பு மற்றும் பகிர்தலுக்கான இரண்டு கொள்கைகளை இந்திய அறிவியல் தொழில்நுட்பத் துறை விரைவில் அறிவிக்க உள்ளது.





அதுபோல அறிவியல் சமூகப் பொறுப்பு என்பது மிக முக்கி
யமானது. அதனடிப்படையில், அறிவியல் கல்வி நிறுவனங்கள் தங்களிடமுள்ள வளங்கள் மற்றும் கண்டுபிடிப்புகளை பிற கல்வி நிறுவனங்கள், ஆராய்ச்சி நிறுவனங்களுக்கு கொண்டு செல்ல வேண்டும். விழாவில் பங்கேற்ற சென்னை ஐஐடி இயக்குநர் பாஸ்கர் ராமமூர்த்தி பேசுகையில், ஏராளமான கல்வி நிறுவனங்களின் நிதி பங்களிப்புடன் மிகுந்த பயனுள்ள இந்த ஆராய்ச்சிக் கருவி உருவாக்கப்பட்டுள்ளது. தனியார் நிறுவனங்கள் குறிப்பிட்ட கட்டணம் செலுத்துவதன் மூலம், அவர்களின் ஆராய்ச்சிக்கு இதைப் பயன்படுத்திக் கொள்ள முடியும் என்றார்.

No comments:

Post a Comment

Please Comment