பாஸ்போர்ட் மூகாம் - ThulirKalvi Blogs

Latest

Search This Site

பாஸ்போர்ட் மூகாம்

ஜூலை 14ல் வேலூர், கடலூரில் சிறப்பு பாஸ்போர்ட் முகாம்
வேலூர், கடலூரில் வரும் 14ம் தேதி சிறப்பு பாஸ்போர்ட் முகாம் நடைபெற உள்ளது.
பொது மக்களின் தேவையை நிறைவேற்றவும், நேர்காணலுக்கான நேரம் நீட்டிக்கப்பட்டதன் காரணமாக, அடிக்கடி பயணம் செய்வோர் தங்களது விண்ணப்பங்களை சமர்ப்பிக்க ஏதுவாகவும், சென்னையில் உள்ள மண்டல பாஸ்போர்ட் அலுவலகம், ஜூலை 14, 2018 சனிக்கிழமை அன்று, வேலூர் மற்றும் கடலூரில் உள்ள அஞ்சலக பாஸ்போர்ட் சேவை மையங்களில் சிறப்பு பாஸ்போர்ட் முகாமிற்கு ஏற்பாடு செய்துள்ளது.
வேலூர் & கடலூரில் உள்ள அஞ்சலக பாஸ்போர்ட் சேவை மையங்கள், ஜூலை 14, 2018 சனிக்கிழமை அன்று, பிற வழக்கமான வேலை நாளை போன்று செயல்படுவதுடன், விண்ணப்பதாரர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நேரத்தின்படி விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளும்.
இந்த முகாம் மூலம், ஏறக்குறைய 110 விண்ணப்பதாரர்கள் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த பாஸ்போர்ட் முகாமில் பங்கேற்க விரும்பும் அனைத்து விண்ணப்பதாரர்களும், 'www.passportindia.gov.in', என்ற அதிகாரபூர்வ இணையதளத்தில் ஆன்லைன் முறையில் பதிவு செய்து, விண்ணப்ப பதிவு எண் பெறுவதுடன், இணையதளம் மூலமாகவே கட்டணத்தையும் செலுத்தி, நேர்காணலுக்கு நேர ஒதுக்கீடு பெறலாம். இந்த முகாமில் பங்கேற்கும் விண்ணப்பதாரர்கள், தங்களது விண்ணப்ப பதிவு எண்ணைக் கொண்ட நகலுடன், தேவையான அசல் சான்றிதழ்கள் மற்றும் சுய சான்றொப்பமிட்ட சான்றிதழ்களின் பிரதி ஒன்றையும் அஞ்சலக பாஸ்போர்ட் சேவை மையத்திற்கு எடுத்து வர வேண்டும். புதிய மற்றும் மீள் பாஸ்போர்ட் கோரும் விண்ணப்பங்கள் மட்டும் ஏற்றுக் கொள்ளப்படும்.
ஜூலை 14, 2018 அன்று நடைபெற உள்ள முகாமில் பங்கேற்பதற்கான நேர ஒதுக்கீடு பற்றிய விவரங்கள், ஜூலை 11, 2018 (புதன்கிழமை) 14.30 மணிக்கு வெளியிடப்படும். முகாம் நாளன்று அவரவருக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் மட்டுமே விண்ணப்பங்கள் பெற்றுக் கொள்ளப்படும். காவல்துறை தடையின்மைச் சான்று, நிறுத்தி வைக்கப்பட்ட மற்றும் மறுக்கப்பட்ட டோக்கன்களுக்கான விண்ணப்பங்கள் இந்த முகாமின் போது ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.

No comments:

Post a Comment

Please Comment