தமிழில் நீட் தேர்வு எழுதிய 24000 மாணவர்களுக்கு இனிய செய்தி ..! - ThulirKalvi Blogs

Latest

Search This Site

தமிழில் நீட் தேர்வு எழுதிய 24000 மாணவர்களுக்கு இனிய செய்தி ..!


தமிழில் நீட் தேர்வு எழுதிய 24000 மாணவர்களுக்கு இனிய செய்தி ..!

கூடுதலாக 196 மதிப்பெண்கள் வழங்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு!
உயர் நீதிமன்ற மதுரைக்கிளை , நீட் தேர்வில் பிழையான ஒவ்வொரு கேள்விக்கும் 4 மதிப்பெண்கள் வீதம் வழங்க சிபிஎஸ்இ க்கு உத்தரவிட்டுள்ளது.




இது தொடர்பாக வழக்கு உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாராணைக்கு வந்தது.இந்த வழக்கை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் டி.கே. ரெங்கராஜன் எம்.பி ,நீட் வினாத்தாள் குளறுபடி வழக்கில் 196 மதிப்பெண்கள் கருணை மதிப்பெண்ணாக வழங்க வேண்டும் என்று தொடர்ந்தார்.

பின்னர் இதை விசாரித்த நீதிமன்றம், தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்க வேண்டும். 49 வினாக்கள் நீட் தேர்வில் தவறாக கேட்கப்பட்டிருந்ததால் கருணை மதிப்பெண் வழங்க உத்தரவிட்டுள்ளது.49வினாக்களுக்கு தலா 4 மதிப்பெண்கள் வீதம் 196மதிப்பெண்கள் வழங்க வேண்டும்.தமிழில் நீட் தேர்வு எழுதிய 24000க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு கருணை அடிப்படையில் கூடுதலாக 196 மதிப்பெண்கள் வழங்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.சி.பி.எஸ்.இ.


கருணை மதிப்பெண் வழங்கி 2வாரத்தில் புதிய தரவரிசைப் பட்டியல் வெளியிடவேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

மேலும் செய்திகளுக்கு துளிருடன் இணைந்திருங்கள்.
8

No comments:

Post a Comment

Please Comment