Plus one - ThulirKalvi Blogs

Latest

Search This Site

Plus one

பிளஸ் 1 பொதுத்தேர்வு: மறுமதிப்பீடு முடிவுகள் இன்று வெளியீடு




கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற பிளஸ் 1 பொதுத்தேர்வை எழுதி மறுகூட்டல், மதிப்பீடு கோரி விண்ணப்பித்தவர்களுக்கு தேர்வு முடிவுகள் புதன்கிழமை வெளியிடப்படவுள்ளது



இது குறித்து தேர்வுத்துறை இயக்குநர் தண்.வசுந்தராதேவி செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பு

மறுகூட்டல், மறுமதிப்பீடு கோரி விண்ணப்பித்தவர்களின், மதிப்பெண் மாற்றம் உள்ள தேர்வர்களின் பதிவெண்களின் பட்டியல் scan.tndge.in என்ற இணையதளத்தில் புதன்கிழமை பிற்பகல் 2 மணிக்கு வெளியிடப்படவுள்ளது







அந்தப் பட்டியலில் இல்லாத பதிவெண்களுக்கான விடைத்தாள்களில் மறுகூட்டல், மறுமதிப்பீட்டுக்குப் பின் எந்தவித மதிப்பெண் மாற்றமும் இல்லை என தெரிவிக்கப்படுகிறது




மதிப்பெண் மாற்றம் உள்ள தேர்வர்கள் புதன்கிழமை (ஜூலை 4) பிற்பகல் 2 மணி முதல்  www.dge.tn.nic.in என்ற இணையதளத்துக்குச் சென்று தங்களது பதிவெண், பிறந்த தேதி ஆகிய விவரங்களைப் பதிவு செய்து தங்களுக்கான திருத்தப்பட்ட மதிப்பெண்கள் அடங்கிய மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்


No comments:

Post a Comment

Please Comment