11ம் வகுப்பு பாட புத்தகங்கள் தொடர்பாக மெட்ரிக் பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி வகுப்பு தொடக்கம் 8 நாட்கள் நடக்கிறது
அரசு, அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்களை தொடர்ந்து மெட்ரிக் பள்ளி ஆசிரியர்களுக்கும் 11ம் வகுப்பு பாட புத்தகங்கள் தொடர்பான பயிற்சி வகுப்பு நேற்று தொடங்கியது. தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டிற்கான 11ம் வகுப்பு புதிய பாட புத்தகங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இவை மாணவ மணவியருக்கு ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளன. பள்ளிகளில் வகுப்புகள் தொடங்கி 2 மாதங்கள் நிறைவுt பெறுகின்ற நிலையில் தற்போது புதிய பாட புத்தகங்கள் தொடர்பான பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளின் ஆசிரியர்களுக்கு முதல்கட்டமாக பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது.
இந்தநிலையில் தனியார் பள்ளிகளின் ஆசிரியர்கள் கற்றல், கற்பித்தல் பணிகளை சிறந்த முறையில் வகுப்பறைகளில் மேற்கொள்ள புதிய பாட புத்தகங்கள் தொடர்பாக மெட்ரிக் மேல்நிலை பள்ளி ஆசிரியர்களுக்கு மாவட்ட அளவிலான பயிற்சி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
Please Comment