WhatsApp - ThulirKalvi Blogs

Latest

Search This Site

WhatsApp

வாட்ஸ்அப் வதந்திகளுக்கு வைக்கப்படும் ஆப்பு..? நேரடியாகவே களமிறங்கிய வாட்ஸ்அப் நிறுவனம்: பயனாளர்களுக்கு விடுக்கப்படும் எச்சரிக்கை..!
சமூக வலைத்தளங்களின் மூலம் உருவாகும் வதந்திகளால் ஏற்படும் தாக்குதல்களை தடுக்கும் முயற்சியாக, வாட்ஸ்அப் நிறுவனம் புதிய முயற்சி ஒன்றை செய்துள்ளது.
சமூக வலைத்தளங்களில் மக்களால் அதிகமாக பயன்படுத்தப்படும் பேஸ்புக் மற்றும் குறுஞ்செய்தி செயலியான வாட்ஸ்அப் ஆகியவற்றின் மூலம் சமீபகாலமாக பல்வேறு வதந்திகள் பரவி வருகின்றன.
குறிப்பாக, பெண்கள் கற்பழிப்பு, குழந்தைகள் கடத்தல் கும்பல் தொடர்பாக பகிரப்படும் தவறான தகவல் மற்றும் வதந்தியால் நாட்டின் பல பகுதிகளில் வன்முறையும் உயிரிழப்பும் ஏற்படுகிறது .
இவ்வாறு தவறான வதந்திகள் பரவுவதை தடுக்க வாட்ஸ் அப் நிறுவனத்தை மத்திய அரசு எச்சரித்தது. மேலும் மத்திய உள்துறை அமைச்சகம் மாநில அரசுகளுக்கு சுற்றரிக்கை மூலம் ''சமூகவலைத்தளங்கள் மூலமாக உருவாகும் வதந்திகளால் ஏற்படும் தாக்குதல்களை தடுக்கு அளவிற்கு, மாநில அரசுகள் முன்கூட்டியே அதனை அறிந்து தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்''.
என அதிரடியாக ஒரு உத்தரவை பிறப்பித்தது.
இந்நிலையில் வாட்ஸ்அப் நிறுவனம் சார்பில் 10 சதவித அறிவுறுத்தல்களுடன் ஒருபக்க அளவில் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. அதில் ஒரு தகவலை பார்வேர்டு செய்வதற்கு முன்பு அதன் உறுதித்தன்மையை உணர்தல் வேண்டும்.
பரிமாறப்படும் தகவலின் உண்மைத்தன்மையை அறிதல் வேண்டும், தகவல் மீது சந்தேகம் இருப்பின் அதனை பகிர்வதற்கு முன்பாக யோசித்தல் வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
பிரபல வார்த்தைகளால் பகிரப்படும் லிங்க்-ல் உள்ள எழுத்துகளை சரிபார்த்தல் வேண்டும்,, நம்ப முடியாத தகவல்கள் பகிரப்படும்போது அது உண்மைதானா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவேண்டும் என்றும் வாட்ஸ்அப் நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.

No comments:

Post a Comment

Please Comment