World population day - ThulirKalvi Blogs

Latest

Search This Site

World population day

*இன்று (ஜூலை 11ம்தேதி )உலக மக்கள் தொகை தினம்*
               
 உலக மக்கள் தொகை 1987ம் ஆண்டில் 500 கோடியானதை முன்னிட்டு ஐ.நா.சபை ஜூலை 11ம் தேதியை உலக மக்கள் தொகை தினமாக அறிவித்தது.

பெருகிவரும் மக்கள் தொகையால் வனப்பகுதிக்கும் அதில் வாழும் உயிரினங்களுக்கும் ஆபத்து ஏற்படுகிறது. மனிதர்கள் வாழ்வதற்கான இட நெருக்கடியும் ஏற்படுகிறது. இதுபோன்ற பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்கிற நோக்கில் இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது.
இந்தியாவின் மக்கள்தொகை கடந்த 30 ஆண்டுகளில் 50% அதிகரித்துள்ளது.
‌உலகளவில் 138 கோடி மக்கள்தொகையுடன் சீனா முதல் இடத்திலும்,131 கோடியுடன் இந்தியா 2 வது இடத்திலும் உள்ளன.

20 ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் 20 கோடியாக இந்திய மக்கள்தொகை இருந்தது.
2017 ல் 131 கோடியாக உயர்ந்துள்ளது.கடந்த 110 ஆண்டுகளில் 110 கோடி அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.  தமிழ் நாடு இந்திய மக்கள் தொகையில் 6% ம்,உலக மக்கள்தொகையில் 1.05% ம் உள்ளது.குறிப்பாக இந்திய மக்கள்தொகை எண்ணிக்கையில் தமிழகம் 6 வது இடத்தில் உள்ளது.
உலக மக்கள்தொகை எதிர்காலத்தில் 2024ல்-800 கோடியாகவும்,2100ல்-1120 கோடியாக உயரலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Please Comment