தபால்துறை சார்பில், நாடு முழுவதும் அஞ்சல் நிலையங்களில் வங்கிச் சேவை அளிக்கும் திட்டம் (பேமென்ட்ஸ் வங்கி) வரும் செப்டம்பர் 1-ஆம் தேதி தொடங்கப்படுகிறது.
முதல்கட்டமாக தமிழகத்தில் 37 கிளைகள் உள்பட நாடு முழுவதும் 648 கிளைகளில் இந்த வங்கிச் சேவை அளிக்கப்படவுள்ளது.
இந்திய அஞ்சல் துறை, ரிலையன்ஸ், ஏர்டெல், வோடாஃபோன், ஆதித்யா பிர்லா உள்பட 11 நிறுவனங்களுக்கு பேமென்ட்ஸ் வங்கி தொடங்க 2014-ஆம் ஆண்டு நவம்பர் 27-ஆம் தேதி ரிசர்வ் வங்கி அனுமதி அளித்தது. அதன்படி, இந்திய அஞ்சல்துறை சார்பில், 650 இடங்களில் பேமென்ட்ஸ் வங்கிகள் தொடங்க முடிவு செய்யப்பட்டது.
முதல்கட்டமாக ராஞ்சி, ராய்ப்பூர் ஆகிய இடங்களில் அஞ்சல் துறை சார்பில் சோதனை முயற்சியாக பேமென்ட்ஸ் வங்கிகள் ஜனவரி 30-ஆம் தேதி தொடங்கப்பட்டன. அதைத் தொடர்ந்து நாடு முழுவதும் தேர்வு செய்யப்பட்ட 648 இடங்களில் பேமென்ட்ஸ் வங்கி செப்டம்பர் ஒன்றாம் தேதி தொடங்கப்படவுள்ளது. இவற்றில் தமிழகத்தில் மட்டும் 37 கிளைகளில் பேமென்ட்ஸ் வங்கிச் சேவை அளிக்கப்பட வுள்ளது. இக்கிளைகளுடன் அருகில் உள்ள அஞ்சல் நிலையங்கள் வங்கிச் சேவை அளிப்பதற்காக இணைக்கப்படவுள்ளன.
இதுகுறித்து அஞ்சல் துறை தமிழக வட்டத் தலைவர் எம். சம்பத் கூறியது:
நாட்டில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தபட்சம் ஒரு கிளையாவது தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே இரு கிளைகளில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து மீதமுள்ள 648 கிளைகள் செப்டம்பர் ஒன்றாம் தேதி செயல்பாட்டுக்கு வருகின்றன. நாடு முழுவதும் இந்த கிளைகளை தில்லியில் இருந்து காணொலிக் காட்சி மூலம் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்கிறார்.
தமிழகத்தில் 37 கிளைகள்: தமிழகத்தைப் பொருத்தவரை, 37 கிளைகளில் பேமென்ட்ஸ் வங்கிச் சேவை தொடங்கப்படுகின்றன. இந்த கிளைகளுடன் 185 அஞ்சல் நிலையங்கள் இணைக்கப்பட்டு வங்கிச் சேவை அளிக்கப்படும். தற்போது தமிழகத்தில் 11, 745 அஞ்சல் நிலையங்கள் உள்ளன. அனைத்து அஞ்சல்நிலையங்களிலும் பேமென்ட்ஸ் வங்கிச் சேவைகளை வரும் டிசம்பருக்குள் அளிக்கும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதேபோல் பேமென்ட்ஸ் வங்கியில் ஒரு லட்சம் கணக்குகளை ஒரே நாளில் தொடங்கவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.
அண்ணா சாலையில் பேமென்ட்ஸ் வங்கி: சென்னை மண்டலத்தில், சென்னை அண்ணா சாலை தலைமை அஞ்சலகத்தில் ஒரு கிளை தொடங்கப்படுகிறது என்று அஞ்சல்துறை சென்னை மண்டலத் தலைவர் ஆர்.ஆனந்த் தெரிவித்தார். சென்னை மண்டலத்தில் 5 பேமென்ட்ஸ் வங்கி கிளைகள் தொடங்கப்படவுள்ளன. இந்த கிளைகளில் 30 அஞ்சல் நிலையங்கள் இச்சேவையைப் பெற இணைக்கப்படுகின்றன
.
சென்னை அண்ணா சாலையில் உள்ள கிளையில் மேலாளர் உள்பட 4 பேர் இருப்பர். 5 அஞ்சல் நிலையங்கள் இந்த கிளையுடன் வங்கிச் சேவைக்காக இணைக்கப்பட்டுள்ளன. அஞ்சலகத்தில் கணக்கு இல்லாதவர்களுக்கு கணக்கு தொடங்குவது, டிஜிட்டல் பரிவர்த்தனை, வீட்டுக்கு சென்று சேவை அளிப்பது போன்றவை இதன் முக்கிய நோக்கம் என்றார் ஆர். ஆனந்த்.
என்னென்ன சேவை பெற முடியும்:
இந்த பேமென்ட்ஸ் வங்கியில் அனைத்து வங்கிச் சேவைகளும் அளிக்கப்படும். குறிப்பாக ஒரு லட்சம் ரூபாய் வரையிலான வைப்புத் தொகை பெறுதல், எந்த வங்கிக் கணக்குக்கும் பணப்பரிமாற்றம் செய்தல் உள்ளிட்ட நிதிச் சேவைகளும், செல்லிடப்பேசி மூலம் பரிவர்த்தனை போன்ற டிஜிட்டல் சேவைகளும் பெற முடியும்.
கட்டணமின்றி கணக்கு தொடங்கலாம்: பேமென்ட்ஸ் வங்கியில் கட்டணம் இன்றி கணக்கு தொடங்கலாம். பணம் எடுப்பதற்கு ஒரு சிறிய தொகை பெறப்படும். ஒரு கணக்கில் இருந்து மற்றொரு கணக்குக்கு பணத்தை பரிமாற்றம் செய்ய கட்டணம் கிடையாது. அதேபோல், தொலைபேசி, மின்சாரம், டி.டி.எச். கட்டணம் மற்றும் கல்லூரிக் கட்டணம் உள்ளிட்டவையும் செலுத்த முடியும். தேசிய ஊரக வேவைவாய்ப்பு உறுதித் திட்டம், மானியங்கள், ஓய்வூதியம் போன்ற அரசின் பணப்பலன்களும் இந்த வங்கி மூலம் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment
Please Comment