பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளிடையே பேச்சாற்றல் மற்றும் படைப்பாற்றலை வளர்க்கும் நோக்கில் கவிதை, கட்டுரை, பேச்சு போட்டிகள் வரும் 31ம் தேதி மற்றும் 14ம் தேதிகளில் நடைபெறுகிறது.இது குறித்து பெரம்பலூர் கலெக்டர் சாந்தா ஒரு செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:
பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த அனைத்து மேல்நிலைப்பள்ளி மற்றும் அனைத்து வகை கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவிகளிடையே பேச்சாற்றலையும், படைப்பாற்றலையும் வளர்க்கும் நோக்கத்தில், பெரம்பலூர் மாவட்ட தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில் கவிதை, கட்டுரை, பேச்சு போட்டிகள் நடைபெற உள்ளன. அதன்படி பள்ளி மாணவர்களுக்கு வருகிற 31ம் தேதியன்றும், கல்லூரி மாணவர்களுக்கு வரும் 14ம்தேதியன்றும் நடைபெறவுள்ளது.மாணவ, மாணவிகளிடையேயான கவிதை, கட்டுரை, பேச்சு போட்டிகள் காலை 9 மணிக்கு, பெரம்பலூர் சீனிவாசன் இருபாலர் கலை, அறிவியல் கல்லூரியில் நடைபெறவுள்ளது.
இப்போட்டியில் கலந்து கொள்வதற்கான விண்ணப்பம் மற்றும் விதிமுறைகள் தமிழ் வளர்ச்சித்துறை உதவி இயக்குநரால், அனைத்து மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியருக்கும், அனைத்து கல்லூரி முதல்வர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. போட்டியில் கலந்துகொள்ள விருப்பமுள்ள மாணவர்கள் தங்கள் பள்ளி தலைமையாசிரியர், கல்லூரிமுதல்வரை அணுகி விண்ணப்பத்தைப் பெற்று பூர்த்திசெய்து பள்ளி தலைமை ஆசிரியர், கல்லூரிமுதல்வரின் ஒப்பம்பெற்று போட்டிநடைபெறும் நாளன்று போட்டிகள் நடைபெறும் பெரம்பலூர் சீனிவாசன் இருபாலர் கலைஅறிவியல் கல்லூரி யில், காலை 9மணிக்கு வருகைதந்து போட்டியில் கலந்து கொள்வதற்கான வருகைப் பதிவேட்டில் ஒப்பமிட வேண்டும்;.
ஒவ்வொரு போட்டியிலும் வெற்றிபெறும் மாணவர்களுக்கு முதல் பரிசாக ரூ.10 ஆயிரமும், 2ம் பரிசாக ரூ.7 ஆயிரமும், 3ம் பரிசாக ரூ.5 ஆயிரமும், சான்றிதழ்களும் வழங்கப்படும். இந்தப் போட்டிகளில் முதல்பரிசு பெற்றவர்கள் மட்டும் சென்னையில் நடைபெறும் மாநிலஅளவிலான போட்டிக்கு அனுப்பப்படுவர்.

No comments:
Post a Comment
Please Comment