விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே அரசு தொடக்கப் பள்ளியில் அனைத்து வகுப்புகளிலும் கணினி திரை மூலம் பாடம் நடத்தும் நடவடிக்கை தொடங்கப் பட்டு உள்ளது. சிவகாசி அருகே உள்ள திருத்தங்கலில் உள்ள இந்தப் பள்ளி 122 ஆண்டு பழமை வாய்ந்த அரசு தொடக்கப் பள்ளியாகும். மாவட்டத்திலேயே அதிக மாணவர்களைக் கொண்ட பள்ளி என்ற சிறப்பை கொண்ட இந்த பள்ளியின் 15 வகுப்பறைகளில் கணினி திரை அமைக்கப்பட்டுள்ளது.
கணினி திரையில் பெரிய புத்தகம் காட்டப்பட்டு அதன் மூலம் கற்பிக்கும் முயற்சி மாணவர்களுக்கு கூடுதல் ஆர்வம் தரும் என்று நம்பப் படுகிறது. முன்னாள் மாணவர்கள் இணைந்து பள்ளியை முன்னேற்றவும், அழகுபடுத்தவும், வசதிகள் செய்து தரவும் பல்வேறுவகையில் உதவிசெய்து வருவதாக கூறும் பள்ளியின் தலைமை ஆசிரியர் கண்ணபிரான்
இந்த ஆண்டில் மட்டும் புதிதாக 180 மாணவர்கள் சேர்ந்துள்ளதாக கூறுகிறார். சிறந்த முறையில் கல்வியை வழங்கி வரும் இந்த அரசு பள்ளிக்கு இந்தக் கல்வியாண்டில் சிறந்த பள்ளிக்கான காமராசர் விருதும் தமிழக அரசு சார்பில் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. -
No comments:
Post a Comment
Please Comment