இறந்த தன் குட்டியை 1000 மைல்கள் கடலில் சுமந்து சென்ற தாய் திமிங்கலத்தை நினைத்து விஞ்ஞானிகள் நெகிழ்ச்சி அடைந்துள்ளனர். உணர்வுப்பூர்வமான இந்த சம்பவம் பசுபிக் கடலில் நடந்துள்ளதாக விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர்.
அழிவின் விளிம்பில் இருந்து பாதுகாக்கும் பொருட்டு பசுபிக் கடல் பகுதியில் வசிக்கும் திமிங்கலத்தின்t எண்ணிக்கையையும், அவற்றின் வாழ்க்கை சூழலையும் விஞ்ஞானிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். அப்போது மனதை நெகிழ வைக்கும் ஒரு சம்பவத்தை பார்த்த விஞ்ஞானிகளின் கண்கள் கலங்கின.
" ஜெ35" என பெயரிடப்பட்ட திமிங்கலம் ஒன்று இறந்து விட்ட தனது குட்டியை உடலுடன் சுற்றிக்கொண்டு சுமார் 17 நாட்கள் வரை கடலில் சுற்றி வந்துள்ளது. இந்த செயலை பார்த்த விஞ்ஞானிகள் வியப்பில் ஆழ்ந்தனர்.
இது குறித்து அவர்கள் பேசும்போது " ஜெ35 என்ற திமிலங்கத்தின் குழந்தை பிரசவத்தின் போது இறந்து விட்டது. இறந்த அந்த குட்டி திமிங்கலத்தை, தாய் திமிங்கலம் இரண்டு வாரங்களாக தனது உடலில் சுமந்து கொண்டு பசுபிக் கடல், கனடா மற்றும் அமெரிக்காவின் வடமேற்கு பகுதிகளை சுற்றி வந்துள்ளது. இதனைt நாங்கள் கடந்த வெள்ளிக்கிழமையன்று கண்டறிந்தோம் " என நெகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.
17 நாட்கள் கடந்த நிலையில் தான் சுமந்து சென்ற குட்டித் திமிங்கலத்தை, கடலில் போட்டு விட்டு தாய் திமிங்கலம் சென்ற தருணம் உணர்வுப்பூர்வமாக இருந்ததாகவும் விஞ்ஞானிகள் குறிப்பிட்டனர்.
கடந்த 20 வருடங்களாக பசுபிக் கடல் பகுதியில் பிரசவத்தின் போது 25 சதவிகித திமிங்கலங்கள் மட்டுமே உயிர்பிழைப்பதாக ஆராய்ச்சியாளர்கள் வருத்தம் தெரிவித்தனர்.

No comments:
Post a Comment
Please Comment