கேரள வெள்ளம்: பாதிக்கப்பட்ட மக்களுக்காக மூட்டை சுமந்த தமிழ் ஐ.ஏ.எஸ். அதிகாரி - ThulirKalvi Blogs

Latest

Search This Site

கேரள வெள்ளம்: பாதிக்கப்பட்ட மக்களுக்காக மூட்டை சுமந்த தமிழ் ஐ.ஏ.எஸ். அதிகாரி





வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மக்களுக்கு உதவ ஐ.ஏ.எஸ். அதிகாரி ராஜமாணிக்கம் பொருட்கள் உள்ள மூட்டைகளை சுமக்கும் படங்கள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.











கேரளாவில் பெய்துவரும் கனமழையால் பல மாவட்டங்கள் வெள்ளத்தில் தத்தளிப்பது நா அறிந்ததே. தமிழகத்தில் இருந்தும் ஏராளமானவர்கள் பண மற்றும் பொருள் உதவி செய்து வருகிறார்கள். அரசியல் கட்சகளும் லட்சக்கணக்கில் நிதி உதவி அளித்துள்ளன.


பொருள் உதவிகள் ஒரு பக்கம் குவிந்தாலும், அதை பாதிக்கப்பட்ட மக்களுக்கு கொண்டுபோய் சேர்ப்பது பெரும் சவாலாக இருக்கிறது.
இந்த நிலையில்தான் களத்தில் இறங்கி பாதிக்கப்பட்டவர்களுக்கு முதல் கட்ட உதவிகளை செய்யவேண்டும் என்று கேரளா மாநிலத்தில் உணவு பாதுகாப்பு துறை ஆணையராக இருக்கும் ஐ.ஏ.எஸ். அதிகாரி ராஜமாணிக்கம் முடிவுசெய்தார்.



இவர் ஏற்கெனவே கேரளாவில் பிரபலம். கொச்சின் பகுதியில் பணியாற்றியபோது, 'அன்போடு கொச்சின்' என்ற அமைப்பை துவங்கி அதன் மூலம் ஏாரளமாக இளைஞர்களின் துணையோடு ஏரி குளங்களை துார் வாரியவர்.


எர்ணாகுளம் பகுதியில் பணியாற்றியபோது,
'என்டகுளம் எர்ணகுளம்' என்ற அமைப்பை துவங்கி அங்குள்ள இளைஞர்களின் துணையோடு விடுமுறை நாட்களில் குளங்களை எல்லாம் தூர்வாரினார்.


இதனால் மக்களின் மனதில் இடம் பிடித்தவர். தற்போது வெள்ள சேதம் அதிகமாக இருக்கும் நிலையல், மிகவும் பாதிக்கப்பட்டுள்ள வயநாடு பகுதி மக்களுக்கு உதவ நினைத்தார்.



அங்கு சென்று நிவாரணப்பணியில் ஈடுபட அழைப்புவிடுத்தார். ஆயிரக்கணக்கான இளைஞர்கள் குவிந்தனர். அதே போல இவரது கோரிக்கைக்கு செவிசாய்த்து, ஏராளமான புதுப்போர்வைகள் துணி மணிகள் பாத்திரங்கள் படுக்க பாய் அடுப்பு அரிசி பருப்பு போன்ற அத்தியாவசிய பொருட்களை பொதுமக்கள் கொண்டுவந்து குவித்தனர்.
இரவு பகல் பாராமல், உணவு உறக்கம் மறந்து, கிடைத்த இடத்தில் அமர்ந்து தனக்கு தெரிந்தவர்களிடம் பேசிப்பேசி நிவாரணப் பொருட்களை சேகரித்தார். ஒரே இரவில் நான்கு லாரிகளில் கொண்டு செல்லும் அளவுக்கு பொருட்கள் சேர்ந்தன.


அதே இரவில் வயநாடு பகுதிக்கு பொருட்களை அந்த பொருட்களைக் கொண்டு செல்ல பேக் செய்யும் பணியிலும் ஈடுபட்டார். பேக்கிங் செய்த பெட்டிகளை முதுகிலும் தோளிலும் சுமந்கு லாரிகளில் ஏற்றினார்.



இதைப் பார்த்த இளைஞர்கள் இன்னும் உத்வேகம் அடைந்து, சில மணி நேரத்தில் லாரிகளில் பொருட்கள் ஏற்றி முடித்தனர்.
பிறகு வயநாடு பகுதிக்கு கொண்டு செல்லப்பட்ட பொருட்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது.


அதே நேரம், மேலும் நிறைய போர்வை, பாய், அடுப்பு, அரிசி, பருப்பு பாத்திரங்கள் தேவைப்படுகிறது என்று இவர் வேண்டுகோள் விடுத்திருக்கிறார். இதை ஏற்று தமிழகத்தில் இருந்து குறிப்பாக மதுரையில் இருந்து நிறையபேர் உதவி செய்ய முன்வ்து பொருட்களை அனுப்பிக்கொண்டிருக்கிறார்கள்.


மதுரையில் உள்ள சமூக ஆர்வலர் மணிகண்டன் மட்டுமே ஐயாயிரம் ரூபாய்க்கான செருப்புகளை வாங்கி அனுப்பி இருக்கிறார்.
நீங்களும் ராஜமாணிக்கத்தின் வேண்டுகோளை ஏற்று கேரளாவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ விரும்புகிறீர்களா?
மதுரையில் உள்ள ராஜமாணிக்கத்தின் நண்பர் மணிகண்டனை தொடர்பு கொள்ளுங்கள் அவரது எண்:9244317137.
ராஜமாணிக்கம் பற்றி இன்னும் கொஞ்சம் தெரிந்துகொள்வோமா?


எம்.ஜி.ராஜமாணிக்கம், மதுரை மாவட்டம் மேலுார் வட்டம் திருவாதவூரைச் சார்ந்த எளிய குடும்பத்தில் பிறந்தவர். இவரது தந்தை குருசாமி மீனாட்சி அம்மன் கோவில் பணியாளராக இருந்தவர்.

No comments:

Post a Comment

Please Comment