இயற்கை சீற்றத்தில் சிக்கி பேரழிவை சந்தித்துள்ள கேரளாவுக்கு பல தரப்பில் இருந்தும் நிவாரணம் குவிந்து வருகிறது.
இந்த வகையில், ஆந்திர அரசு பணியாளர்கள் சார்பில் கேரளா வெள்ள நிவாரண நிதிக்கு ரூ.20 கோடி ரூபாய் நன்கொடை அளிக்கப்படும் என அம்மாநில என்.ஜி.ஓ.க்கள் சங்கத் தலைவர் அசோக் பாபு இன்று தெரிவித்துள்ளார்.
அரசுப் பணியாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதார்களிடம் இருந்து பிடித்தம் செய்யப்பட்டு இந்த தொகை அனுப்பப்படவுள்ளது. இதேபோல், தங்களது ஒருநாள் சம்பளத்தை நன்கொடையாக அளிக்க ஆந்திரா ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் சங்கமும் முடிவு செய்துள்ளது.
No comments:
Post a Comment
Please Comment