தமிழக கல்லூரிகளில் செல்போனுக்கு தடை உத்தரவு வாபஸ் - ThulirKalvi Blogs

Latest

Search This Site

தமிழக கல்லூரிகளில் செல்போனுக்கு தடை உத்தரவு வாபஸ்

கல்லூரியில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு ஆடை கட்டுப்பாடு உள்பட பல்வேறு கட்டுப்பாடுகள் இருக்கிறது. சில கல்லூரிகள் இந்த கட்டுப்பாடுகளை கடுமையாக பின்பற்றி வருகின்றன.



இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் உள்பட அனைத்து கல்லூரிகளிலும் மாணவ-மாணவிகள் செல்போன் பயன்படுத்த தடை விதித்து, கல்லூரி கல்வித்துறை இயக்குனரகம் சமீபத்தில் உத்தரவு பிறப்பித்தது.



செல்போனால் மாணவ- மாணவிகளின் கவனம் சிதறுகிறது. இதை தடுக்க இந்த முடிவை தமிழக அரசு மேற்கொண்டுள்ளது. ஏற்கனவே பள்ளிகளில் செல்போனுக்கு தடை இருக்கிறது. தற்போது கல்லூரி வளாகத்தில் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டது.



இந்நிலையில், , இந்த உத்தரவை நடைமுறைப்படுத்துவதில் பல சிக்கல்கள் இருப்பதாக கூறப்பட்டு தற்போது இந்த உத்தரவு வாபஸ் பெறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Please Comment