மூன்றாண்டு ஹானர்ஸ் சட்டப் படிப்பு: ஆகஸ்ட் 27-இல் கலந்தாய்வு - ThulirKalvi Blogs

Latest

Search This Site

மூன்றாண்டு ஹானர்ஸ் சட்டப் படிப்பு: ஆகஸ்ட் 27-இல் கலந்தாய்வு

சட்டப் பல்கலைக்கழக ஆற்றல்சார் பள்ளியில் வழங்கப்படும் மூன்றாண்டு எல்.எல்.பி. (ஹானர்ஸ்) சட்டப் படிப்பில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு வரும் ஆகஸ்ட் 27-ஆம் தேதி நடத்தப்பட உள்ளது.


பட்டப் படிப்பு தகுதிக்கான மூன்று ஆண்டுகள் எல்.எல்.பி. சட்டப் படிப்பு சேர்க்கையை பல்கலைக்கழகம் தொடங்கியுள்ளது. முதல் கட்டமாக பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள ஆற்றல்சார் பள்ளியில் வழங்கப்படும் எல்.எல்.பி. (ஹானர்ஸ்) படிப்பில் சேர்க்கைக்கான கலந்தாய்வை வரும் 27-ஆம் தேதி நடத்த உள்ளது.



கலந்தாய்வில் பங்கேற்க மொத்தம் 719 பேர் விண்ணப்பித்திருந்தனர். அதில் 123 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டு தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டது.கலந்தாய்வில் பங்கேற்பதற்கான அழைப்புக் கடிதங்கள் மாணவர்களுக்கு தபால் மூலம் தனித்தனியே அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அழைப்புக் கடிதம் கிடைக்காத தகுதியுள்ள மாணவர்களும் கட்-ஆஃப் மதிப்பெண் தரவரிசைப் பட்டியல் அடிப்படையில் கலந்தாய்வில் பங்கேற்கலாம் என பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. 



மேலும் விவரங்களைwww.tndalu.ac.in என்ற இணையதளத்தில் பார்த்துத் தெரிந்துகொள்ளலாம்.

No comments:

Post a Comment

Please Comment