கோவா அரசில் காலியாக உள்ள 80 கணக்காளர் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு இந்த ஆண்டு ஜனவரி மாதம் நடத்தப்பட்டது. மொத்தம் 100 மதிப்பெண்களுக்கு 5 மணி நேரம் நடத்தப்பட்ட இந்த தேர்வில் ஆங்கிலம், பொது அறிவு மற்றும் கணக்குப்பதிவியல் கேள்விகள் கேட்கப்பட்டது.குறைந்தபட்சம் 50 மதிப்பெண்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற நிலையில், தேர்வு எழுதிய 8000 பட்டதாரிகளும் தோல்வி அடைந்தனர். வெற்றி பெற்றவர்கள் மட்டுமே நேர்முக தேர்வுக்கு அழைப்படுவார்கள்.
தேர்வு எழுதிய ஒருவர் கூட வெற்றி பெறதாததால் தேர்வுத்துறை குழப்பத்தில் ஆழ்ந்துள்ளது.இது கோவா மாநிலத்தின் கல்வித்துறை பாழடைந்துள்ளதையே காட்டுகிறது எனவும், தேர்வு எழுதிய 8000 பேரும் தோல்வி அடைந்ததாலேயே தாமதமாக முடிவுகளை அரசு வெளியிட்டுள்ளதாகவும் ஆம்ஆத்மி கட்சியின் கோவா மாநில பொதுச் செயலாளர் பிரதீப் பட்னாகர் விமர்சித்துள்ளார்.இத்தகைய பட்டதாரிகளை உருவாக்கி இருப்பது கோவா பல்கலை.,க்கும், கல்லூரிகளுக்கும் பெரிய அவமானம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment
Please Comment