நம் வாழ்க்கை டிஜிட்டல் மயமானதில் இருந்து மொபைல் போன்கள் மிக முக்கியமாகிப் போனது. நாளுக்கு நாள் புதிய ஸ்மார்ட் போன்களின் வருகை அதிகரிக்கத் துவங்கியுள்ளது. புதிய ஸ்மார்ட் போன் வாங்க வேண்டும் என்ற எண்ணம் வந்துவிட்டால் நாம் சந்திக்கும் முதல் சிக்கல், எந்த ஸ்மார்ட் போன் ஐ தேர்ந்தெடுப்பது என்பது தான்.
இனி அந்தச் சிக்கல் வேண்டாம், உங்கள் அத்தியாவசிய பயன்பாட்டிற்கு சிறந்த நண்பனாகச் சிறந்த தொழில்நுட்ப நுண்ணறிவுடன் உங்கள் தேவைகளை நிறைவேற்றும் சிறந்த ஸ்மார்ட்போனாக களமிறங்கி இருப்பது தான் ஓப்போ எப்9 ப்ரோ ஸ்மார்ட்போன்.
தொழில்நுட்ப வளர்ச்சி நம்மை இன்னும் நவீனம் ஆக்கிக்கொண்டுதான் இருக்கிறது சமூக வலைத்தளங்கள், இன்ஸ்டாகிராம் மற்றும் டிவிட்டர் போன்ற மல்டிமீடியா பயன்பாடுகள் அதிகரித்துள்ளது. மக்களின் அதீத ஸ்மார்ட்போன் பயன்பாட்டினை உணர்ந்து ஓப்போ நிறுவனம் தனது புதிய ஓப்போ எப்9 ப்ரோ ஸ்மார்ட்போன் ஐ பிரத்தியேகமாக உருவாக்கியுள்ளது.
பட்ஜெட் விலையில் பயனருக்கு சிறந்த கேமரா, அட்டகாசமான திரை, நீடித்து நிலைக்கும் பேட்டரி மற்றும் தடையில்லா பயன்பாடு போன்ற ஆற்றல் கொண்ட மல்டிமீடியா பயன்பாட்டுடன் கூடிச் சிறந்த ஸ்மார்ட்போன்னை அறிமுகம் செய்துள்ளது ஓப்போ நிறுவனம். இன்றைய சமுதாயத்திற்காக சிறந்த தொழிநுட்பத்துடன் உங்கள் தினசரி தேவைகளை நிலைத்து நின்று நிறைவேற்றும் சூப்பர் ஸ்மார்ட்போனாக ஓப்போ எப்9 ப்ரோ ஸ்மார்ட்போன் இருக்குமென்பதில் சந்தேகமில்லை. இந்த புதிய ஓப்போ எப்9 ப்ரோ இன் விலை ரூ.23,990 மட்டுமே.
பிளாஷ் சார்ஜ்ர் தொழில்நுட்பம்:
இடைவிடாத தொடர் பயன்பாட்டிற்கு முக்கிய தேவை நீடித்து நிலைக்கும் பேட்டரிகள், நீதித்து நிலைக்கு பேட்டரிகளை சார்ஜ் செய்வதற்கு அதிக நேரம் தேவைப்படும். அந்தச் சிக்கலை ஓப்போ நிறுவனம் உடைத்துள்ளது, நீடித்து உழைக்கும் பேட்டரிகளை உடனடியாக சார்ஜ் செய்வதற்கு விஓஓசி(VOOC) பிளாஷ் சார்ஜ்ர் தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்துள்ளது.
புதிய ஓப்போ எப்9 ப்ரோ விஓஓசி(VOOC) பிளாஷ் சார்ஜ்ர் தொழில்நுட்பம் படி ஒரு மணி நேரத்தில் முழு பேட்டரியையும் சார்ஜ் செய்துவிடுகிறது. சூப்பர் வேகம் கொண்ட சார்ஜிங் தொழில்நுட்பமானது, குறைந்த மின்னழுத்ததிலும் வேகமாக சார்ஜ் செய்து முடிகிறது. விஓஓசி(VOOC) பிளாஷ் சார்ஜ்ர் தொழில்நுட்பம் வழக்கமான 5V/1A சார்ஜ் முறைகளை விட 4 மடங்கு வேகமாக சார்ஜ் செய்கிறதென்பது குறிப்பிடத்தக்கது.
கூடுதலாக ஓப்போ உங்களின் பாதுகாப்பையும் கணக்கில் கொண்டுள்ளது. விஓஓசி(VOOC) பிளாஷ் சார்ஜ் தொழில்நுட்பம் உங்கள் போன் ஓவர்ஹீட் ஆவதைத் தவிர்க்கிறது. ஐந்து அடுக்கு பாதுகாப்பு தளம் கொண்ட ஸ்மார்ட் சார்ஜிங் அடாப்டர் போர்ட் மூலம் உங்கள் போன் ஐ குறைந்த மின்னழுத்தம் மற்றும் குறைந்த வெப்பத்துடன் பாதுகாப்பாக சார்ஜ் செய்கிறது. வெறும் 5 நிமிடம் சார்ஜ் செய்தால் போதும் 2 மணிநேர தொடர் பயன்பாட்டை வழங்குகிறது இந்த புதிய விஓஓசி(VOOC) பிளாஷ் சார்ஜ் தொழில்நுட்பம். நம்ப முடியவில்லை என்றால் உங்கள் ஓப்போ எப்9 ப்ரோவை சார்ஜ்ரில் பிளக் செய்து பாருங்கள்.
கேமரா செயல்திறன்:
சிறந்த படைப்பாளர்களுக்கு சிறந்த கேமரா வசதி கொண்ட ஸ்மார்ட்போன்கள் தேவை, சிறந்த புகைப்படம் மற்றும் தரத்தை வழங்கும் மாதிரியான கேமராக்கள் ஓப்போ எப்9 ப்ரோ வில் உள்ளது. ஒரு 25 மெகாபிக்சல் முன் செல்பி கேமரா மற்றும் 16மெகா பிக்சல் உடன் கூடிய 2 மெகா பிக்சல் இரட்டை லென்ஸ் டூயல் பின் கேமரா அமைப்பு கொண்டுள்ளது.
25MP முன் செல்பி கேமரா f / 2.0 அப்பேர்ட்சர் துளைகள் சிறந்த பொக்கே விளைவை உருவாக்குகிறது. நீங்கள் பார்க்கும் ஒவ்வொரு வண்ணத்தையும் சூப்பர் விவிட் பயன்முறைபடி மேம்படுத்தி உங்கள் திரையில் கொடுக்கிறது. பின்புற கேமராவின் 16MP சென்சார் பிரகாசமான f / 1.8 அப்பேர்ட்சர் துல்லிய மதிப்பில் செயல்படுகிறது, அதேசமயம் இரண்டாம் நிலை கேமரா ஒரு f / 2.4 அப்பேர்ட்சர் துல்லியத்தை வன்பொருள் இயக்கி ஹார்ட்வேர் பொக்கே எபெக்ட் தருகிறது. இத்துடன் உங்கள் படங்களை அழகுபடுத்த பல்வேறு ஸ்டூடியோ லைட்டிங் விருப்பங்களுக்கிடையே தேர்வு செய்ய ஓப்போ எப்9 ப்ரோ அனுமதிக்கிறது.
25 மெகா பிக்சல் முன் செல்பி கேமரா பேஸ்புக், Instagram மற்றும் YouTube நேரடி அமர்வுகள் போன்ற பயன்பாட்டிற்குச் சிறப்பித்து செயல்படும் விதத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. நீங்கள் உலகின் சிறந்த மற்றும் ஆக்கப்பூர்வமான கேமரா சேவையை பார்க்க விரும்பினால், ஓப்போ வின் ஏஐ அழகு 2.1 செயல்பாட்டினை உபயோகித்துப் பாருங்கள். உங்கள் செல்பிக்கென பலதரப்பட்ட AR ஸ்டிக்கர்கள் வழங்கப்பட்டிருக்கிறது.
ஓப்போ எப்9 ப்ரோ இல் உள்ள 25 மெகா பிக்சல் கேமரா ஏஐ கேமரா மென்பொருள் மூலம் இயக்கப்படுகிறது,எனவே சிறந்த பொக்கே காட்சிகளை சவாலான லைட்டிங்கிலும் பயனர்களுக்கு வழங்குகிறது. இத்துடன் HDR பயன்முறையும் திறம்பட செயல்படுகிறது மற்றும் மற்ற கேமரா போல அல்லாமல் அனைத்து லைட்டிங்கிலும் சிறந்து செயல்படுகிறது.
அதேபோல் பின்புற கேமராவிற்கு வரும்போது, ஓப்போ எப்9 ப்ரோ ஒவ்வொரு சூழ்நிலையிலும் சரியான காட்சிகளை பதிவு செய்கிறது. கேமராக்கள் AI இயங்குதளத்தில் புத்திசாலித்தனமாக மற்றும் துல்லியமாக ஒரே நேரத்தில் 16 பொருட்களை அடையாளம் கண்டு சிறப்பான மிகத் துல்லியமான புகைப்படத்தை வழங்குகிறது. கேமரா சென்சார்கள் அனைத்து வண்ணங்கள் மற்றும் ஒளி நிலைகளைச் சமநிலை படுத்தி நீங்கள் எதிர்பார்த்திடாத அழகிய புகைப்படங்களை ஓப்போ எப்9 ப்ரோ வழங்குகிறது.
அட்டகாசமான முழு எச்டி+ திரை:
பேட்டரி மற்றும் கேமிராக்கள் ஆகியவை முக்கியத்துவம் வாய்ந்தவை என்றாலும், பயனர்களுக்குச் சிறந்த காட்சி நிலையம் முக்கியமானது. உங்களின் எண்ணத்திற்கு ஏற்ப அழகாக இருக்க வேண்டும் என்பதற்காகவே ஓப்போ சிறந்த திரை வசதியை வழங்கி இருக்கிறது. ஓப்போ எப்9 ப்ரோ 6.3இன்ச் முழு எச்டி+ வாட்டர் ட்ராப்லெட் திரையுடன் சிறந்த 90.8% திரை விகிதத்தை வழங்குகிறது மற்றும் 19.5: 9 விகிதத்தில் மற்றும் கேம்ஸ் விளையாட்டிற்காக வழங்கப்பட்டிருக்கிறது.
2018 ஆம் ஆண்டில் நடுப்பகுதி மற்றும் இறுதியில் வெளிவந்த பெரும்பாலான ஸ்மார்ட்போன்கள் பெரிய நாட்ச் வசதியுடன் வெளிவந்தது. ஓப்போ எப்9 ப்ரோ வாட்டர் ட்ராப்லெட் திரை உங்கள் மல்டிமீடியா அனுபத்தை எண்டு- எண்டு நாட்ச் லெஸ் திரையுடன் வழங்குகிறது.
சிறந்த செயல்திறன்
ஓப்போ எப்9 ப்ரோ ஸ்மார்ட்போன் சிறந்த ஹார்வேர் சேவையுடன் சக்திவாய்ந்த ஆற்றலைப் பயனருக்கு வழங்குகிறது. ஓப்போ எப்9 ப்ரோ 6 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள் சேமிப்பு கொண்டுள்ளது. முக்கியமாக, ஒரு சிம் கார்டு ஸ்லாட் உள்ளது இத்துடன் உள் சேமிப்பை விரிவாக்கும் வசதியும் உள்ளது. இதன்படி ஒரே நேரத்தில் இரண்டு சிம் கார்டு மற்றும் ஒரு மைக்ரோ SD அட்டையைப் பயன்படுத்து கொள்ளலாம்.
மொத்தத்தில், ஓப்போ எப்9 ப்ரோ ஆனது தொழில்நுட்ப நுண்ணறிவு உள்ளடக்கப் பயனர்களின் தினசரி வாழ்க்கையில் ஒரு முக்கிய பங்காற்றும் திறனைக் கொண்டுள்ளது. குறைந்த செலவில் சிறந்த சேவை வழங்குவதே ஓப்போ வின் லட்சியம்.
No comments:
Post a Comment
Please Comment