செப்டம்பர் முதல் பிரிமியம் ரெயில்கள் கட்டணம் குறைகிறது - ThulirKalvi Blogs

Latest

Search This Site

செப்டம்பர் முதல் பிரிமியம் ரெயில்கள் கட்டணம் குறைகிறது

பிரிமியம் ரெயில்களுக்கான கட்டணத்தை அடுத்த மாதம் முதல் குறைக்க ரெயில்வே முடிவு செய்துள்ளது. இதன் மூலம் விமான கட்டணத்தை விட அதிகமாக ரெயிலுக்கு செலவு செய்து வந்த குறிப்பிட்ட பயணிகளுக்கு நிம்மதி ஏற்படவுள்ளது.


இது குறித்து ரெயில்வே அதிகாரிகள் சிலர் கூறுகையில்,''சில பிரிமியம் ரெயில்களில் பயணிகளின் எண்ணிக்கை 30 சதவீதம் மட்டுமே உள்ளது. இதனால் இந்த திட்டத்தை தற்காலிகமாக நிறுத்த அமைச்சகம் முடிவு செய்துள்ளது.



அல்லது ஹம்சபார் ரெயிலில் உள்ளது போது முதல் 50 சதவீத படுக்கைகளுக்கு 15 சதவீத கூடுதல் கட்டணம் வசூலிப்பது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்படுகிறது. அதாவது மெயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ரெயில்களின் 3ம் வகுப்பு ஏசி கட்டணத்தை விட அதிகமாக இருக்கும். இதன் பின்னர் அடுத்தடுத்து ஒவ்வொரு 10 சதவீத படுக்கை கட்டணம் உயர்த்தப்படலாம்.


கூட்டம் குறைவாக இருக்கும் வழித்தடங்களில் சிறப்பு தள்ளுபடி வழங்கும் ஆலோனையும் உள்ளது. இந்த திட்டத்துக்கான இறுதி முடிவு அடுத்த வாரத்தில் அறிவிக்கப்படலாம். கட்டணம் குறைக்கப்படுவதால் ஏற்கனவே ரிசர்வ் செய்தவர்களுக்கு கட்டணம் திருப்பி செலுத்தவும் வாய்ப்பு உள்ளது.
சமீபத்தில் வெளியான சிஏஜி அறிக்கையில், ரெயில்களை விட விமானத்தில் பயணம் செய்வதால் செலவு மிச்சமாகிறிது என்பதை சுட்டிக்காட்டியிருந்தது. இதன் அடிப்படையிலேயே பிரிமியம் ரெயில்களின் கட்டணத்தை குறைக்க ரெயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Please Comment