தூய்மை வளாகம்' தரமதிப்பீடு உயர்கல்வி நிறுவனங்களுக்கு அழைப்பு - ThulirKalvi Blogs

Latest

Search This Site

தூய்மை வளாகம்' தரமதிப்பீடு உயர்கல்வி நிறுவனங்களுக்கு அழைப்பு

தூய்மை வளாகம்' தரமதிப்பீடு உயர்கல்வி நிறுவனங்களுக்கு அழைப்பு

மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை, துாய்மை வளாகத்திற்கான தரவரிசை பட்டியல் வெளியிட உள்ளது. இதற்கான விண்ணப்பம் சமர்ப்பிக்க, உயர்கல்வி நிறுவனங்களுக்கு அழைப்பு விடப்பட்டுள்ளது

கல்வி நிறுவனங்களின் தரத்தை அறியும் வகையில், கல்வித்தரம், கட்டமைப்பு, மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் செயல்பாடு, ஆராய்ச்சி உள்ளிட்டவைகளை ஆய்வு செய்து என்.ஐ.ஆர்.எப்., தரவரிசை பட்டியல் ஆண்டு தோறும் வெளியிடப்படுவது வழக்கம். தற்போது, துாய்மை வளாகத்திற்கான பட்டியல் வெளியிடப்படவுள்ளது

இதில், கழிவறை, விடுதி, உணவகம், விடுதி சமையலறை, கழிவு மேலாண்மை, குடிநீர் சுத்திகரிப்பு, மழை நீர் சேமிப்பு, பசுமை வளாகம், சோலார் பயன்பாடு, கிராமங்கள் தத்தெடுப்பு மற்றும் பராமரிப்பு உள்ளிட்டவைகள் ஆய்வு செய்யப்பட்டு, தரம் மதிப்பீடு செய்யப்படும்.இதற்கான, பதிவு பணிகள் கடந்த, 9ம் தேதி துவங்கியது


வரும், 23ம் தேதி வரை ஆன்-லைன் மூலம், ( www.mhrd.gov.in) விண்ணப்பம் பதிவு செய்யலாம். ஆக., செப்., மாதங்களில் மத்திய மனிதவள மேம்பாட்டு துறையின் சிறப்பு குழு, ஆய்வு மேற்கொள்ளும். செப்., இறுதியில், தகுதிபெற்ற கல்லுாரிகளின் பட்டியல் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

No comments:

Post a Comment

Please Comment