வேளாண் நுழைவுத்தேர்வு அனுமதி அட்டை வெளியீடு - ThulirKalvi Blogs

Latest

Search This Site

வேளாண் நுழைவுத்தேர்வு அனுமதி அட்டை வெளியீடு

வேளாண் நுழைவுத்தேர்வு அனுமதி அட்டை வெளியீடு


தேசிய வேளாண் நுழைவுத்தேர்வெழுதும் மாணவர்களுக்கான, மின்னணு அனுமதி அட்டையை, ஐ.சி.ஏ.ஆர்., வெளியிட்டுள்ளது


ஐ.சி.ஏ.ஆர்., எனப்படும் இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகத்தின் கீழ் நாடு முழுவதும்t செயல்படும் வேளாண் பல்கலைகள் மற்றும் நிறுவனங்களில், பல்வேறு வேளாண் படிப்புகள் வழங்கப்படுகின்றன


இவற்றில், இளநிலை படிப்புகளில், 15 சதவீதம், முதுநிலை மற்றும் ஆராய்ச்சி படிப்புகளில், 25 சதவீத இடங்கள், அகில இந்திய வேளாண் நுழைவு தேர்வுகள் மூலம், இடஒதுக்கீடு முறையில் நிரப்பப்படுகின்றன



ஜூன் 22, 23ம் தேதிகளில் நடந்த தேசிய வேளாண் நுழைவுத்தேர்வுகள், தொழில்நுட்ப கோளாறு காரணமாக ரத்து செய்யப்பட்டன. மறுதேர்வுகள், ஓ.எம். ஆர்., வினாத்தாள்கள் மூலம், 'ஆப் - லைன்' முறையில், நடக்கிறது



முதுநிலைt மற்றும் ஆராய்ச்சிப் படிப்புகளுக்கான தேர்வுகள், ஆக., 18; இளநிலை படிப்புகளுக்கான தேர்வுகள், ஆக., 19ல் நடக்கின்றன


நாடு முழுவதும், 54 நகரங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன


தமிழக மாணவர்களின் வசதிக்காக, கோவை, சென்னை ஆகிய நகரங்களில்t தேர்வு மையம் ஒதுக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கான, மின்னணு அனுமதி அட்டையை, ஐ.சி.ஏ.ஆர்., வெளியிட்டுள்ளது



 மாணவர்கள், www.icarexam.net என்ற இணையதளத்தில், தங்கள், 'லாகின் ஐடி' மற்றும் 'பாஸ்வேர்டு' பயன்படுத்தி, 'அப்ளிகன்ட் லாகின்' பகுதியில்,'கிளிக்' செய்து, 'இ - அட்மிட்' அட்டையை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்

No comments:

Post a Comment

Please Comment