அரசு ஒதுக்கீட்டின் கீழ் உள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புக்கு நாளை 2ம் கட்ட கலந்தாய்வு
சென்னை: தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரிகள், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீடு இடங்களுக்கான கலந்தாய்வு நாளை தொடங்குகிறது.தமிழகத்தில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் மாணவர் சேர்க்கைக்கான முதல்கட்ட கலந்தாய்வு ஜூலை 1ம் தேதி முதல் 7ம் தேதி வரை நடந்தது. அதில் அரசு, தனியார் அரசு மருத்துவக்கல்லூரிகளில் உள்ள 2,443 இடங்கள், 85 பிடிஎஸ் இடங்கள், தனியார் மருத்துவக்கல்லூரிகள், பிடிஎஸ் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீடு இடங்களுக்கான கலந்தாய்வு நடந்தது. இந்த கலந்தாய்வில் பங்கேற்று அரசுக்கல்லூரிகளில் உள்ள இடங்களை தேர்வு செய்த மாணவர்களுக்கு, ஆகஸ்ட் 1ம் தேதி வகுப்புகள் தொடங்கியது.
இரண்டு சுற்றுக்களாக நடந்த இணையவழி அகில இந்திய மருத்துவ கலந்தாய்வுக்கு பின் மாணவர்கள் சேராத இடங்களின் எண்ணிக்கையை ஆகஸ்ட் 8ம் தேதி மாலைக்குள் சமர்ப்பிக்க மத்திய மருத்துவக்கல்வி இயக்ககம் மருத்துவக்கல்லூரி முதல்வர்களுக்கு அறிவுறுத்தியிருந்தது.
No comments:
Post a Comment
Please Comment