தகுதியற்றவர்களுக்கு இனி ஆசிரியர் விருது கிடையாது..! மத்திய அரசின் புதிய முடிவு..!
முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் ராதாகிருஷ்னன் அவர்களின் பிறந்த நாளான செப்டம்பர் 5 யை ஆசிரியர் தினமாக மத்திய அரசு அறிவித்ததை அடுத்து, ஒவ்வொரு ஆண்டும் அவர் பிறந்த நாளை, நாடும் முழுவதும் ஆசிரியர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறோம். இவர் ஆசிரியர் பணியை மிகவும் விரும்பி செய்ததால், அவருடைய பிறந்தநாளை ஆசிரியர் தினமாக மத்திய அரசு அறிவித்தது.
மேலும், அந்த நாளில் நாடு முழுவதிலும் உள்ள ஆசிரியர்களை கவுரவிக்கும் வகையில், தகுதியான ஆசிரியர்களை தேர்ந்தெடுத்து, மத்திய அரசு விருது வழங்கி வருகிறது.
ஒவ்வொரு ஆண்டும், அனைத்து மாநிலங்களுக்கும் தலா 20 ஆசிரியர்களுக்கு மேல் விருது வழங்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், தகுதியற்ற ஆசிரியர்களுக்கு விருது வழங்கப்படுவதை தடுக்க, இந்த ஆண்டு முதல், நாடு முழுவதும் மொத்தமாக 45 ஆசிரியர்களுக்கு மட்டுமே விருது வழங்கப்படும் என மனிதவள மேம்பாட்டு துறை தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு பொறுத்தவரையில், 23 என்று எண்ணிக்கையில், மத்திய அரசால் ஆசிரியர் விருது வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில், தமிழ்நாட்டுக்கு 3 நபர்களுக்கு மட்டுமே மத்திய அரசின் ஆசிரியர் விருது கிடைக்கும்.
No comments:
Post a Comment
Please Comment