டி.என்.பி.எஸ்.சி க்ரூப்-2 தேர்வுகள் நவம்பர் 11-ல் நடைபெறும் என்று அறிவிப்பு
சென்னை: டி.என்.பி.எஸ்.சியால் நடத்தப்படும் க்ரூப்-2 தேர்வுகள் வரும் நவம்பர் 11-ல் நடைபெறும் என்று தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
டி.என்.பி.எஸ்.சி என்று அழைக்கப்படும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமானது அரசின் பல்வேறு பதவிகளுக்கான தேர்வுகளை நடத்தி வருகிறது.
அந்த வகையில் தமிழக அரசில் ஏறக்குறைய 23 பிரிவுகளில் இருக்க கூடிய 1199 காலிப் பணியிடங்களுக்கான க்ரூப்-2 தேர்வுகள் வரும் நவம்பர் 11-ல் நடைபெறும் என்று தேர்வாணையம் தற்பொழுது அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இந்த தேர்வுக்கு இன்று துவங்கி வரும் செப்டம்பர் 9-ஆம் தேதி வரை டி.என்.பி.எஸ்.சியின் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
No comments:
Post a Comment
Please Comment